முதல் மனைவி இருக்கும் போதே 2வது மனைவியை வீட்டுக்கு கூட்டி வந்த கணவன்..! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்! திருவண்ணாமலை திகுதிகு!

திருமணம் ஆன சில நாட்களிலேயே குடும்பத் தகராறு ஏற்பட்டதால் முதல் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த கணவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் வெறையூரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் விழுப்புரம் மாவட்டம் மணலூர் பேட்டையை சேர்ந்த விமலா என்பவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு 2018ம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் ஆன சில மாதங்களில் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் கணவன், மனைவி இடையே சண்டை வந்துள்ளது.

நாளடைவில் இவர்கள் பிரச்சனை பெரிய அளவில் உருவெடுக்க மனைவி விமலா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வரமாட்டார் என நினைத்த மணிகண்டன் வேறு ஒரு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பனையூரை சேர்ந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார் மணிகண்டன்.

மணிகண்டன் தன்னிடம் கேட்காமலும், முறையாக விவாகரத்து வாங்காமலும் திருமணம் செய்து கொண்டதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் கணவர் மணிகண்டன், மாமியார் கஸ்தூரி, மாமனார் ஜெகன்நாதன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணிகண்டனை நம்பி வந்த பெண்ணும் சரியாக விசாரிக்காமல் மோசம் போய்விட்டோமே என்று வேதனைபடுகிறார் தற்போது.