படுக்கை அறையில் ரகசிய கேமராவை வைத்த கணவன்! கண்டுபிடித்த மனைவி எடுத்த அதிரடி முடிவு!

பெண்ணின் படுக்கையறையில் கேமராவை மறைத்து வைத்த முன்னாள் கணவன்; துணிந்து வெளிப்படுத்திய பெண்


கனடா நாட்டில் முன்னாள் மனைவியை அவமானப் படுத்துவதற்காக அவரது வீட்டில் ரகசியக்கேமராக்களை வைத்து இணையதளத்தில் வெளியிட்ட முன்னாள் கணவனை அந்தப் பெண் துணிந்து வெளியே தெரிவித்து காவல்துறையில் சிக்கச் செய்தார். 

கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்தவர் சாரா உஸ்மான். அவரது ஒருமாதிரியான புகைப்படங்கள் இணையதளத்தில் உலவவிடப்படுவதாக அவரது முன்னாள் கணவனின் உறவினர்கள் சிலரே அவரிடம் தெரிவித்த போதுதான் சாராவுக்கு விபரீதம் புரிந்தது. இதையடுத்து தனது வீட்டை அவர் ஆய்வு செய்தபோது பல்வேறு இடங்களில் ரகசியக் காமிராக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக தனது முன்னாள் கணவன் மீது சந்தேகம் அடைந்த அவர் நிர்வாணத்தி ரசித்தல், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட புகார்களை அளித்தார். ஆனால், புகார்கள் நிரூபிக்கப்படாத நிலையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக மட்டும் சாராவின் கணவனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கபட்டது. 

பேட்டிகளின் போது தனது முகத்தை மறைத்து வந்த சாரா பின்னர்  துணிச்சலாக ஒரு முடிவு எடுத்து நீதிமன்ற அனுமதியுடன் தனது முகத்தை ஊடகங்களில் வெளியிடச் செய்து தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை வெளிப்படுத்தினார். தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் வெட்கத்தை எதிர்கொள்ள ஆலோசனை கூறும் அமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.