கள்ளக்காதலியுடன் குடித்தனம்! கணவனை செருப்பு, விளக்கமார் பிய்ய பிய்ய வெளுத்த மனைவி! வைரல் வீடியோ!

தெலுங்கானாவில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்ததை கையும் களவுமாக பிடித்த மனைவி கணவரை செருப்பால் வெளுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


தெலுங்கானா மாநிலம் ஆழ்வார் பகுதியை சேர்ந்தவர் கோபால் இவருக்கும் வனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் கோபால் பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருப்பதை அறிந்த அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தனது குடும்பத்தாருடன் வைத்து பேசியுள்ளனர்.

இந்நிலையில் கோபால் மற்ற பெண்களிடம் பேசுவதை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சில நாட்கள் நன்றாக சென்றுள்ளது பிறகு கோபால் தினமும் இரவு வீட்டிற்கு தாமதமாக வருவதும் விடுமுறை நாட்களிலும் வேலை இருப்பதாக கூறி அலுவலகத்திற்கு செல்வதாக வெளியில் வேறொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்து வந்துள்ளார். 

 இந்நிலையில் தனது கணவரை கண்காணித்து ஆரம்பித்த வனிதா ஒருநாள் அவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதை கையும்களவுமாக பிடித்துள்ளார். மற்றும் அப்பெண்ணின் வீட்டிற்கே சென்று அவரது கணவர் மற்றும் அப்பெண்ணை செருப்பால் அடித்தும் துடைப்பத்தால் வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் உடனே அருகில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு அந்த நபரை அடித்துள்ளனர். இந்த வீடியோ பதிவானது தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மற்றும் இது குறித்து ஆழ்வார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோபாலை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.