கணவன் கைகளை கட்டி கண்ணில் மிளகாய் பொடி! கரண்ட் ஷாக்! சுத்தியல் அடி! கொதிக்க கொதிக்க எண்ணெய்! மனைவி ருத்ரதாண்டவம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் பெண் ஒருவர் சந்தேகப்பட்டு நச்சரித்துக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டுள்ளார்.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வசாய் பகுதியை சேர்ந்த குயின் சியா என்பவருக்கும் அசாமை சேர்ந்த பவிஷ்யா புரோஹோகைன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பூ போல வாழ்ந்து வந்த குடும்பத்தில் பவிஷ்யாவின் நண்பரான நாயக் மூலம் புயல் வீசத் தொடங்கியது. நண்பர் என்ற பெயரில் பவிஷ்யா வீட்டிற்கு அடிக்கடி சென்று குயின் சியாவை சந்தித்து பேசி வந்துள்ளார் நாயக்.

இதனால் நண்பருடன் தகாத உறவு வைத்துள்ளதாக மனைவி மீது சந்தேகம் அடைந்த குயினின் கணவர் பவிஷ்யா அவரை அடிக்கடி கேட்டு நச்சரித்துள்ளார். குயின் எவ்வளவு சொல்லியும் அவரது பேச்சை நம்பாமல் கடுமையாக துன்புறுத்தி வந்துள்ளார் கணவர். 

இது குறித்து உறவினர்களிடம் குயின் தெரிவித்தபோது நாளடைவில் சரியாகிவிடும் என அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே பிரச்சனையை முன் வைத்து பவிஷ்யா குயினுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான குயின் கணவர் நாயக்கை வீட்டுக்கு வருமாறு அழைத்து கணவரின் கால்களை கட்டிப்போட்டுள்ளார்.

பின்னர் கணவரை சுத்தியலால் சரமாரியாக தாக்கிய குயின் மிளகாய் பொடியை எடுத்து கண்ணில் தூவி உள்ளார். அப்போது ஆத்திரம் அடங்காமல் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதனால் துடி துடித்து போன கணவர் அய்யோ அம்மா என மராட்டிய மொழியில் அலறியுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து போலிசுக்கு தகவல் தெரிவித்ததுடன் பவிஷ்யாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். குயின் மற்றும் அவரது நண்பர் நாயக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மனைவி மீது சந்தேகம் இருந்தால் விவகாரத்து செய்துவிட்டு செல்லலாம், அல்லது கணவன் துன்புறுத்தல் அதிகமாக இருந்தால் விவாகரத்து செய்து மனைவி சென்றிருக்கலாம். சந்தேகத் தீயால் இருவருமே தற்போது வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கின்றனர்.

குறைந்தபட்சம் உண்மையான நட்பாக இருந்திருந்தால் குயினை அவரது கணவர் சந்தேகப்படும்போதே நாயக் விலகி சென்றிருந்தால் பிரச்சனை பெரிதாக இருக்காது. கணவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை பார்க்கும்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரியாணி கடை தோழருக்காக 2 குழந்தைகளை கொன்ற மனைவிதான் ஞாபகத்திற்கு வருகிறது.