புருசன் தான் இல்லியே..! வலை விரித்த முன்னாள் தலைவர்..! தொடர் டார்ச்சரால் விதவைப் பெண் எடுத்த விபரீத முடிவு!

பாலியல் புகார் தொடர்பான அளித்த புகார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் ஆலம்பரை கிராமத்தில் கணவரை இழந்த சீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிப்பாளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வீட்டிற்கே வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ள நிலையில் இதுகுறித்து பலமுறை போலீசாரிடம் சீதா புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனாமல் மனமுடைந்த சீதா மனு நீதி நாளான நேற்று காலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது திடீரென தன்னுடைய பையில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து தன்மீது ஊற்றிக் கொண்டார். பின்னர் தீப்பெட்டி எடுத்து தன்னுடைய உடலை தீக்கு இரையாக்க முயற்சித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றினர். பின்னர் தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சீதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சீதாவை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சீதா தற்கொலை முயற்சி செய்து கொண்டது குறித்து நேசமணி நகர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தலைமறைவான பேச்சிப்பாளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.