எடப்பாடி மீது செருப்பு வீசியது ஏன்? போலீசிடம் சிக்கிய இளைஞன் பரபரப்பு வாக்குமூலம்!

தஞ்சையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.


தஞ்சை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஒரத்தநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வெளியில் நின்றபடி பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வேட்பாளர் நடராஜன் ஆகியோரும் என்று வாக்கு சேகரித்து கொண்டிருந்தனர்.

அப்போது செருப்பு ஒன்று வேகமாக வந்து முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மீது பட்டு வேனில் விழுந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வைத்த குறி தவறுதலாக முன்னாள் அமைச்சர் மீது பட்டது. இந்த விவகாரம் குறித்து அதிமுக சார்பில் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஒரத்தநாடு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டு இளைஞர் ஒருவரை கைது செய்தனர். 

அந்த இளைஞர் அதிமுக கரை வேட்டி கட்டிக்கொண்டு தொண்டர்களோடு தொண்டர்களாக நின்று முதல் அமைச்சர் மீது செருப்பு வீசிய தெரியவந்தது. விசாரணையின் போது அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டுள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அந்த நபர் டிடிவி தினகரனின் கட்சியைச் சேர்ந்தவர் என்கிற உண்மை தெரியவந்தது.

இதனை எடுத்து விசாரிக்க வேண்டிய முறைகள் விசாரித்தபோது முதல் அமைச்சர் மீது செருப்பு வீசிய ஏன் என்பதை இளைஞருக்கு கொண்டதாகச் சொல்கிறார்கள். இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார் விரைவில் சிறையில் அடைக்க உள்ளனர். விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொண்டு வருவதால் அவர் மீது செருப்பு வீசியதாக அந்த இளைஞர் கூறியதாக போலீஸ் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.