சிம்புவின் தம்பி குறளரசன் இஸ்லாமுக்கு மாறியது ஏன்? அதிர்ச்சி தகவல்!

நடிகர் சிம்புவின் தம்பியும், இயக்குனர் டி.ஆரின் மகனுமான குறளரசன் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


திரைத்துறையில் பல்துறை திறமையாளரான டி.ராஜேந்தர்  வெள்ளிவிழா கண்ட பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து இயக்கியதோடு பல படங்களில் கதாநாயாகனாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்தவர். மேலும் இசையமைப்பு, பாடல்கள், கதை திரைக்கதை வசனம் என பல்வேறு பணிகளையும் திறம்பட ஏற்றுச் செய்தவர்.

 

டி.ராஜேந்தரின் முதல் மகனான சிம்பு என்ற சிலம்பரசன் கதநாயாகனாக கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருப்பவர். சிம்புவின் தம்பியும் டி.ராஜேந்தரின் இரண்டாவது மகனுமான குறளரசனும் அலை, சொன்னால்தான் காதலா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.

 

பின்னர் இசைத் துறையில் ஆர்வம் திரும்பியதையடுத்து பான்டீராஜின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைப்பாளரான குறளரசன் தற்போது இசைத்துறையில் கவனம் செலுத்திவருகிறார். குறளரசனைப் பற்றிய கடைசித் தகவல் அவர் இஸ்லாமிய மதத்தை தழுவியிருப்பது.

 

இசைத்துறையில் சாதனைகளைப் படைத்து வரும் ..ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இஸ்லாமிய மதத்துக்கு மாறியிருப்பது போல குறளரசனும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர்களைப் போல இஸ்லாமிய மதத்துக்கு மாறியதால் அவர்களைப் போலவே மேதையாக முடியும் என்கிற நம்பிக்கை தான் இந்த மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள்.

 

ரகுமான் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு உலக அளவில் பிரபலமான இசை அமைப்பாளர் ஆனார். இதே போல் புகழின் உச்சியில் இருந்த போது யுவன் சங்கர் ராஜா இஸ்லாமுக்கு மாறினார். இதே போல் இசை அமைப்பாளராக மிளிர துடிக்கும் குறளரசனும் இஸ்லாமுக்கு மாறியுள்ளதாக கூறுகிறார்கள்.  

 

ஆன்மீகவாதியான சிம்பு அவ்வப்போது ரஜினி போல இமயமலைக்குச் சென்று வருவது வழக்கம். டி.ராஜேந்தரும் ஆன்மீகவாதிதான். இந்நிலையில் குறளரசன் பிற முன்னணி இசையமைப்பாளர்களை பின்பற்றி இஸ்லாமிய மதத்தை தழுவியிருக்கிறார்