கமல்ஹாசனின் கடிதத்துக்கு ரங்கராஜ் பாண்டே மட்டும் கொந்தளித்தது ஏன்..? பாண்டேவுக்கு பலே பதிலடி

பிரதமர் நரேந்திர மோடி கைதட்டுங்கள் என்றதையும், பால்கனியில் நின்று விளக்கேற்றுங்கள் என்று சொன்னதையும் பலரும் விமர்சனம் செய்தார்களே தவிர, மோடிக்கு கேள்வி கேட்கவில்லை.


எதிர்க்கட்சிகள் செய்ய்த தயங்கிய காரியத்தை கமல்ஹாசன் செய்தார். ஆம், பால்கனி அரசு என்று பா.ஜ.க. அரசை விமர்சனம் செய்தது மட்டுமின்றி, கொரொனா விவகாரத்தில் எப்படியெல்லாம் முட்டாள்தனம் அரங்கேறியது என்பதை புட்டுப்புட்டு வைத்தார்.

ஆறு பக்கத்தில் அவர் எழுதிய கடித்ததில் இருந்த உண்மைகளை படித்துப் பார்த்து பதில் சொல்ல முடியாமல் பா.ஜ.க. அடங்கிப்போனது. எஸ்.வி.சேகர் போன்ற வில்லங்க பார்ட்டிகள்கூட, ‘இத்தனை பெரிய கடிதத்தை படிக்கும் முன் அடுத்த தேர்தலே வந்துவிடும்’ என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டனர்.

ஆனால், கமல்ஹாசனுக்குப் பதில் சொல்வதாக வந்திருக்கும் ஒரே நபர் ரங்கராஜ் பாண்டே. அவர், ‘எந்த தரவுகளும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எப்படி குற்றம் சாட்டலாம்?’ என்று மோடிக்கு ஆதரவு தெரிவித்து பதிலடி கொடுத்திருந்தார்.

இப்போது பாண்டேவுக்கு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ‘கமல் கடிதத்தை எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கம் தான் உள்ளதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. சென்னை உள்ளிட்ட 75 இடங்களுக்கு மட்டும் ஊரடங்கு என அறிவித்து, அதற்கு மக்கள் தயாராவதற்குள், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை திட்டமிடாமல் பிறப்பித்ததால் நேர்ந்த அவலத்தைத் தான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மக்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றதை ஏன் பாண்டே நீங்க குறிப்பிடவில்லை. பால்கனி என்பது பணக்காரர்களை குறித்த சொல் என்பது தெரிந்தும் தெரியாதது போல், பால்கனி என சொன்னதை விமர்சனம் செய்யலாமா? டெல்லி நடந்த கூட்டத்திற்கு அனுமதி கொடுத்த யார் என்ற விவரத்தையும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை முறையாக பரிசோதனை செய்யாமல் விட்டதை ஏன் சொல்லவில்லை பாண்டே?

வட மாநிலங்களில் நடந்த திருவிழாக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டதை ஏன் சொல்லவில்லை பாண்டே? டெல்லியை பற்றி மட்டுமே குறிப்பிட்டு, 2 நிமிடத்திற்கு பேச 3 தெரிந்த உங்களுக்கு, வடமாநில நிகழ்வுகளை கூறாமல் விட்டது ஏன்? 3 மாத இஎம்ஐ நிறுத்த சொன்ன வங்கிகளை, வட்டி வசூலிக்ககூடாது என ரிசர்வ் வங்கி சொல்லாமல் விட்டது ஏன்? இதை ஏன் நீங்க சொல்லவில்லை? 

ராகுல் காந்தி பிப்ரவரி மாதம் எச்சரித்தார். மன்மோகன் சிங் கடிதம் எழுதினார் ஆனால், மத்திய அரசின் பதில் அன்று தொற்று பரவாது என்பது தான். எச்சரித்தவர்களை கேலி செய்த மத்திய அமைச்சர்களை பற்றி எதுவும் கூறாதது ஏன? ஒரே, பத்திரிக்கையாளர் சந்திப்பில்1,75,000 கோடி ரிசர்ங் வங்கியிடம் வாங்கிய அரசு கொரோனா வைரஸ்க்கு ஒதுக்கியுள்ள தொகை எவ்வளவு? 

பிரதமர் மோடி அதை சொல்லாமல் விட்டது ஏன் பாண்டே? நோய் தொற்றில் இரண்டாவது இடம் இருக்கும் தமிழகத்திற்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு? உபி, பிகார், மாநிலங்களுக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு? இது பாரபட்சம் இல்லையா? இதை ஏன் கேட்கவில்லை பாண்டே? ஊரடங்கை யாரும் குறை கூறவில்லை. அதை சரியான திட்டமிடாமல் செய்ததா வந்த பிரச்சனைகளுக்கு யார் பொறுப்பு என கேட்க கூடாதா? 

தற்போதும், ஏப்ரல் 14க்கு பிறகு,ஊரடங்கு நீட்டிப்பு உண்டா இல்லையா என அரசால் கூற முடியவில்லை. 6 நாட்கள் தான் உள்ளது. பணக்காரர்களுக்கு வங்கியிலும் கையிலும் பணம் உள்ளது. தினக் கூலிகளுக்கு என்ன கையிருப்பு உள்ளது? அவர்கள் எப்படி தயாராவர்கள்? 1000 ரூ போதுமா? அரிசி பருப்பு பல ரேசனில் வழங்கவில்லை.

இதெல்லாம் ஏன் கேட்கவில்லை? வசதியாக மறந்துவிட்டீர்களா? மறைத்துவிட்டீர்களா? தாங்கள் பத்திரிக்கைகாரர் என்று இன்றும் சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை. கமல்ஹாசன் கடித்தில் உள்நோக்கமில்லை. உங்களுக்குத்தான் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கும் ஒரு பதில் போடுங்கள் பாண்டே… உங்களுக்கும் கொரோனாவில் பொழுது போன மாதிரி இருக்கும்.