நேற்றைக்கு மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு முத்துவிழா சென்னையில் நடைப்பெற்றது.
டாக்டர் ராமதாஸை ஏன் மக்கள் மதிக்காமல் வேல்முருகன் பக்கம் செல்கிறார்கள்? புட்டுப்புட்டு வைக்கிறார் வன்னி அரசு!
80 வயது கடந்து 81 வயதை தொடுகிறார். அந்த விழாவில் பேசிய மருத்துவர் ராமதாஸ்,” 8 கோடி மக்களைக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் என் பின்னால் வர மறுக்கிறது. என்னிடம் என்ன குறை இருக்கிறது? என் கொள்கையில் என்ன குறை இருக்கிறது? என்னை பாராட்ட ஏதோ ஒன்று தடுக்கிறது.
இந்த எளியவனை பாராட்ட ஊடகத்தினரும் மற்றவர்களும் தயாராக இல்லை. தமிழுக்காக மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்று பேசினார்.
இப்படி ராமதாஸ் பேசியது சரிதானா, அவரது ஆதங்கம் நியாயமானதா என்று கேள்களுக்கு விடுதலை சிறுத்தைகளின் வன்னியரசு பதில் அளித்துள்ளார். இதோ அவரது அறிக்கை.
டாக்டர் ராமதாச் பேச்சில் கொஞ்சாமாவது உண்மை இருக்கிறதா? குறையற்ற மனிதர் தானா? 8 கோடி தமிழ் மக்கள் மருத்துவர் ராமதாசின் பின்னால் ஏன் வரவில்லை என்று அவருக்கு தெரியாதா? பேச்சுக்கு முன்னூறு முறை ‘வன்னியர்’ ‘வன்னியர்’ என்று பேசுகிறார்.
“வன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லை” என்று மிரட்டி வந்தார். கொடி ஏற்றும் போது சாதிச்சங்க கொடியையும் சேர்த்தே ஏற்றினார். ஏற்ற வழிகாட்டினார். அது மட்டுமல்லாது தமிழகம் முழுக்க அனைத்து சமுதாயப்பேரவை என்ற பெயரில் தலித் அல்லாத இயக்கத்தை நடத்தியும் வந்தார். ஒவ்வொரு ஆண்டும் மாமல்லபுரத்தில் தான் சார்ந்த சாதியின் பெயரால் மாநாடு நடத்தி தலித்துகளை மட்டுமல்லாது மற்ற சமூகத்தை திட்டுவது, மிரட்டுவது என்ற போக்கையும் பார்க்க முடிந்தது.
உண்மை இப்படி இருக்க ஒட்டுமொத்த தமிழகமும் அவரது பின்னால் வரவில்லை என்று பொய்யாக வருந்துகிறார். கோப்படுகிறார். 8 கோடி தமிழ் மக்களை விடுங்கள், அவர் சார்ந்த வன்னிய பெருங்குடி மக்களாவது ஒட்டுமொத்தமாக அவரது பின்னால் திரண்டு இருக்கிறார்களா? அவர்களது நம்பிக்கையை பெற்று இருக்கிறாரா? அதுவும் இல்லை.
இப்போதெல்லாம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் பின்னால் தான் இளைஞர்களும் பொது மக்களும் திரண்டு வருகிறார்கள். அத்தனை பேரும் பாமகவிலிருந்து ராமதாசின் அணுகுமுறை பிடிக்காமல் வேல்முருகன் அவர்கள் பின்னால் அணிவகுக்கிறார்கள்.
சொந்த சாதியை ஏமாற்றுவது, அச்சுறுத்துவது, இரண்டகம் செய்வது என்கிற போக்கை ஏற்க முடியாத பல தலைவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். பலர் கொல்லப்பட்டு இருக்கறார்கள்.
பலர் தப்பித்து எதிர் முகாமில் அரசியல் செய்து வருகிறார்கள். உண்மை இப்படி இருக்க தமிழ் மக்களுக்காக உழைத்த ராமதாசை பாராட்ட யாருக்கும் மனமில்லை என்று புலம்புகிறார். அரசியலில் நேர்மையற்ற ஓர் பேர்வழி என்றால் அவர் ராமதாசு மட்டுமே.
இதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு பல ஆதாரங்களை சொல்ல முடியும். வன்முறை செய்தாவது பிழைப்பு நடத்தவேண்டும் என்னும் உயர்ந்த கொள்கையோடு தமிழக அரசியலில் உதாரணமாக திகழ்ந்து வருபவர். அப்படிப்பட்டவர்தான் தமிழுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று வீர வசனம் பேசி இருக்கிறார். இந்த பேச்சு ஏமாற்றுத்தனம் என்று எல்லோருக்குமே தெரியும்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் சாதிவெறியை பரப்பி இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச்சென்றதே ராமதாசு தான். தமிழர் ஓர்மை அரசியலை முன்னெடுக்க விடாமல், அனைத்து சமுதாயப் பேரவையை உருவாக்கி சாதிவெறியை பரப்பியவர்தான் தமிழிக்காக இனி போராட போகிறாராம். என்ன ஒரு நாடகம்? யாரை ஏமாற்றவாம்?
தாயகம்- தேசியம்- தன்னாட்சி என்னும் தமிழர் தேசிய இனத்தை அழித்து இந்து- இந்தி-இந்தியாவை கட்டமைக்கப்போகும் பாஜகவோடு குடும்பம் நடத்தி வரும் மருத்துவர் ராமதாசா இனி தமிழுக்காக உழைக்கப்போகிறார்?
‘தமிழ்நாடு’ ‘தமிழ்த்தேசியம்’ என்று பேசினாலே என்.ஐ.ஏ.வில் கைது செய்யக்கூட முடியும் என்று சட்ட திருத்தம் செய்த பிறகும் இதுவரை அதுகுறித்து வாய் திறக்காத மருத்துவர் ராமதாசா தமிழுக்காக உழைக்கப்போகிறார்? தமிழர் என்னும் தேசிய இனத்தை போல, ‘காஷ்மீரி’ தேசிய இனத்தை சிதைக்கும் பாஜகவின் இந்த நச்சு அரசியலை எதிர்க்காத மருத்துவர் ராமதாசா தமிழுக்காக தியாகம் செய்ய போகிறார்?
சாதி சாதியாய் பிரித்து மேய்வதுதான் இந்துத்துவ அரசியல். அதை செயல்படுத்துவது தான் பாஜக. அப்படி சாதி அரசியலை முன்னெடுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தமிழகம் முழுக்க கொண்டு செல்ல உதவும் மருத்துவர் ராமதாசா தமிழுக்காக தியாகம் செய்ய போகிறார்?
ஒரு போதும் இனி தமிழக இளைஞர்கள் மருத்துவர் ராமதாசை நம்ப தயாராகவில்லை. இதை புரிந்து கொண்டுதான் இப்படியான ஆதங்கத்தை புலம்பியிருக்கிறார். அத்தனையும் ஏமாற்று வேலை.சாதி ரீதியாக செய்த அரசியலில் தமது அன்பு மகன் அன்பு மணி தோற்றுப்போனார்.
கட்சியும் மாநில கட்சிக்கான தகுதியையும் இழக்கிறது. இந்த சூழலை மாற்ற இப்படி ஒரு தமிழ் வேஷத்தை கட்ட விரும்புகிறார். இந்த வேடமெல்லாம் 90 களில் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி போடப்பட்டதுதான். அடுத்தடுத்து வேடம் கலைந்ததால் யாரும் நம்பவில்லை. இப்போது மீண்டும் ‘தமிழ்’ வேடத்தை தரிக்க முனைகிறார். காலம் போன காலத்தில் ‘சங்கரா’ ‘சங்கரா’ என்று சொல்லுவதைப்போல
இருக்கிறது மருத்துவர் ராமதாஸ் பேச்சு என்று கூறியிருக்கிறார் வன்னியரசு.