நேபாளம் என்ன தைரியத்தில் இந்தியாவுடன் மோதுகிறது...? என்ன செய்யப்போகிறார் மோடி..?

உலகின் ஒரே இந்து நாடு, இந்தியாவின் நட்பு நாடு என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த நேபாளம், இப்போது இந்தியாவின் முதல் எதிரி நாடு என்ற பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறது.


 பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தொடங்கிய மோதல் இப்போது உச்சத்துக்குப் போயிருக்கிறது. இதனை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. 

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்ததாக இந்தியா கூறும் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாளத்தின் பகுதிகளாகக் காட்டும் புதிய அரசியல் வரைபடத்திற்கான சட்டத் திருத்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது. அதனால், இந்த விவகாரத்தில் இனி நேபாளம் பின்வாங்குவதற்கு வாய்ப்பு இல்லை.

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியை, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் என மூன்றாக பிரித்து கடந்த நவம்பர் மாதம் தனது புதிய வரைபடத்தை வெளியிட்டது இந்தியா.

அந்த புதிய வரைபடத்தில்தான், நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே சர்ச்சைக்குரிய பகுதிகளாக இருந்த இந்தப் பகுதிகளை தங்கள் எல்லைக்குள் சேர்த்து மேப் வெளியிட்டது இந்தியா. இது பிரச்னையை ஆரம்பித்துவைத்தது.

அதன்பிறகு, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லிபுலேக் பகுதியில் 80கி.மீ தூரத்திற்கு புதிய சாலைகள் அமைப்பதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுவும் சிக்கலைத் தூண்டியது. நேபாளத்தில் கிளர்ச்சி நடந்த நேரத்தில், இந்தியாவில் இருந்து பொருட்கள் அங்கு செல்வதை நிறுத்தியது. இதுவும் கோபத்தைக் கிளறவே, புதிய மேப் வெளியிட்டுவிட்டது.

சீனா உதவி செய்யும் என்ற நம்பிக்கையில்தான் நேபாளம் இந்தியாவுடன் மோதுகிறது என்பது உண்மையாகவே இருக்க வேண்டும். ஆனால், இப்போது சுண்டைக்காய் நாட்டுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்ப்பதா அல்லது போர் புரிந்து அடக்குவதா என்பதுதான் மோடியின் முன்னே இருக்கும் பிரச்னை. இதனை சரி செய்தால்தான் மோடியின் இமேஜை மீட்க முடியும்.