தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது? இதோ அறிவியல் பூர்வமாக ஒரு விளக்கம்!

நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் பெரும்பாலும் பெரிய விபத்துகள் ஏற்படுவதில்லை. ஆனால், வேகமாக செல்லும் ஹைவேய்ஸ் பகுதியில்தான் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. அது ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் இதோ.


உங்கள் வாகனத்தில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நிமிடங்களிலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.

மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னால் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும்பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதைப் போன்றே இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும். நீங்கள் மெதுவாக செல்வதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்திவிடும்.

திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் இடித்து விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும்பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீது மோதிவிடலாம்.

அப்படியொரு இக்கட்டான சமயத்தில் மட்டும்தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும். ஆனால், அது ஒரு காலம் கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.

மூளையின் இந்த குறைபாட்டைதான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள். ஆகவே, நீங்கள் வேகமாக செல்லும் பொழுது அடிக்கடி SPEEDOMETER-ஐ கவனிக்க பழகிக் கொள்ளுங்கள். மேலும், நம்நாட்டில் 90 KM-க்கு மேல் வெளிநாடுகளில் 120 KM-க்கு மேல் வேகமாக செல்வது ஆபத்துதான்.

நாம் வாகனம் ஓட்டும்போது நம் வரவை எண்ணி வீட்டில் பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்..! ஆம், வேகத்தை விட நிதானமே முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பயணிக்க வேண்டும்.