மோடியின் ஆட்சியில் யாருக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. திடீரென ஒருவரை மேலே தூக்கி வைப்பதும், அடுத்த நொடியே கீழே தூக்கிப் போடுவதும் உண்டு.
நிர்மலா சீதாராமனை ஏன் தள்ளி வைக்கிறார் மோடி? என்ன கோபமோ?

அந்த வகையில் இப்போது சிக்கலில் இருப்பது நிர்மலா சீதாராமன். நிதியமைச்சர் நிர்மலா இல்லாமலே பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்களோடு மோடி ஆலோசனை கலந்திருக்கிறார். முன்னமொரு முறை நிதியமைச்சர் அருண்ஜெட்லியைக் கலந்துகொள்ளாமல் ரூபாய் நோட்டுகளைச் செல்லாதென்று அறிவித்தார்.
சம்பந்தப்பட்ட அமைச்சர்களை இழிவுபடுத்தும் கலையில் மோடி தேர்ந்துவிட்டதையே இது காட்டுகிறது. இப்படிப்பட்டவரின் ஆட்சியில் எப்படி நாடும் வீடும் செழிக்கும்?
மன்மோகன்சிங் தன் ஆட்சிக் காலத்தில் கட்சித் தலைவியாயிருந்த சோனியாகாந்தியைச் சந்திக்கும்போதெல்லாம் பா.ஜ.க.வினர் கடுமையாக கூச்சல் போட்டன, “பிரதமர் எப்படி தனிப்பட்ட தலைவரைக் கேட்டு ஆட்சி நடத்தலாம்,” என்று. இப்போது நிர்மலா எந்த நியாயத்தில் பட்ஜெட் குறித்து பா.ஜ.க. தலைமையோடு ஆலோசனை செய்ய முடியும்?
நிர்மலாவை பார்க்க மோடிக்குப் பிடிக்கவில்லையா அல்லது மோடியை பார்க்க நிர்மலாவுக்குப் பிடிக்கவில்லையா? என்னமோ.... நடக்குறது நல்லதுக்கு இல்லைங்க.