காஷ்மீர் மாநிலத்தை மோடி அமித் ஷா இரண்டாக பிரித்தது ஏன்? அசர வைக்கும் 7 காரணங்கள்!

காஷ்மீர் மாநிலத்தை மோடி – அமித் ஷா இணைந்து 2ஆக பிரித்து யூனியன் பிரதேசமாக்கியிருப்பதற்கான காரணம் அசர வைப்பதாக உள்ளது.


1.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலப்பரப்பு என்பது காஷ்மீர் என்பது 15% வும் ஜம்மு 26% வும் லடாக் 59% வும் ஆகும்.

2.சுமார் 85000 சதுர கிமீ பரப்பளவு கொண்டது இதில் 85% இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றார்கள் ,மொத்த ஜனத்தொகை 1.25 கோடியாகும்

3.காஷ்மீரீல் மட்டும் 69 இலட்சம் பேர் வாழ்கின்றனர் இதில் 55 இலட்சம் காஷ்மீரி மொழி பேசுகின்றனர் மீதம் உள்ள 14 இலட்சம் பேர் பாகிஸ்தானி உருது மொழி பேசுகின்றனர்.ஜம்முவில் 53 இலட்சம் பேர் டோக்ரி ,பஞ்சாபி,ஹிந்தியும் மற்றும் லடாக்கில் 3 இலட்சம் பேர் லடாக்கியும் பேசுகின்றனர்.இதில் 7.5 இலட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் சட்டவிரோதமாக பாக்கிஸ்தான்லிருந்து ஊடுருவி வசிக்கின்றார்கள்

4.ஜம்மு காஷ்மீரீல் மொத்தம் 22 மாவட்டம் இருக்கிறது இதில் 5மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக உள்ளனர்.. அதாவது ஶ்ரீநகர், ஆனந்த் நாக்,பாரமுல்லா,டோதா , புல்வாமா ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் தான் பிரிவினையை ஆதரிக்கின்றனர். மீதமுள்ள 17 மாவட்ட மக்கள் பிரிவினைக்கு எதிராகவும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவும் உள்ளனர்..

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த 5 மாவட்டங்களில் வசிக்கும் 15% சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாகவு உள்ளனர்.

5.ஜம்மு காஷ்மீரீல் தேசியத்துக்கு ஆதரவாக 15 மதங்கள் அடங்கிய சிறுபான்மை சமூகங்கள் ஆகும் இதில் ஷியா முஸ்லீம்கள் 12% ,டோக்ராஸ் காஷ்மீர் பண்டிட்கள்,சீக்கியர்,பெளத்தர்கள்,குஜ்ஜார் முஸ்லீம்கள்(14%),கிறிஸ்த்தவர்கள் , பஹாடி முஸ்லீம்கள்(8%) இப்படி 45% சிறுகுழுக்கள் தேசியத்துக்கு ஆதரவாக பாரத்தத்தோடு தொடர்ந்து இணைந்திருக்க விரும்புகின்றனர் 

மொத்தத்தில் 31% மக்கள் மட்டுமே பாரதத்திற்கு எதிராக பிரிவினையை ஆதரிக்கின்றனர் மீதமுள்ள 69% மக்கள் பிரிவினையை எதிர்ப்பதோடு பாரதத்த்தோடு இணைந்திருக்கவே விரும்புகின்றனர்.

6. தற்போது வன்முறையை முன்னெடுத்து போராடும் பிரிவினைவாத பயங்கரவாத ஆதரவாளர்கள் மேற்சொன்ன 5 மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே மீதியுள்ள 17 மாவட்டத்திலுள்ள மக்கள் எவரும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக இல்லை.

7. 90 % முஸ்லீம்கள் வசிக்கும் பூஞ்ச் ,காஷ்மீர் ஆகிய இருமாவட்டங்களின் சரித்திரத்திலேயே இதுவரை பிரிவினைக்கு ஆதரவாக எந்த வித போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை

நன்றி: உதயன், வழக்கறிஞர்