இந்து மதத்தில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று பலரும் இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்குத் தாவுகிறார்கள்.
கிறிஸ்தவம், முஸ்லீம் மதத்தில் இத்தனை பிரிவுகள் இருக்கிறதா?

அப்படியென்றால், அந்த மதங்களில் பிரிவினையே இல்லையா, அனைவரும் ஒன்றாக மதிக்கப்படுகிறார்களா என்று கேட்டால், கிடைக்கும் இந்தப் பட்டியலைக் காட்டுகிறார்கள்.
தேவன் ஒருவனே என்று சொல்லும் கிறிஸ்தவத்தில் லத்தீன் கத்தோலிக் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சிரியன் கத்தோலிக் பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல மாட்டார்கள். இந்த இரண்டு பிரிவினரும் மார்த்தோமா இன சர்ச்சுக்குள் செல்வதில்லை. இந்த மூவருமே பெந்தகொஸ்தே . திருச்சபைக்குள் நுழைய முடியாது. இந்த நான்கு பிரிவினரும் சால்வேஷன் ஆர்மி தேவாலயத்துக்குள் செல்ல முடியாது.
இந்த ஐவரும் செவன்த்டே அட்வென்டிஸ்ட் இன சர்சுக்குள் போக மாட்டார்கள். இவர்கள் ஆறு பிரிவினருமே ஆர்த்தோடக்ஸ் பிரிவு ஆலயத்துக்குள் போவதில்லை. இந்த ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஜேகோபைட் பிரிவினரின் சர்ச்சுக்குள் நுழைவதில்லை. இது போல் மொத்தம் 146 பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் மட்டு« இருக்கிறதாம்.
இதற்கு கொஞ்சமும் சளைக்காமல் இஸ்லாம் மதத்திலும் பிரிவுகள் இருக்கின்றன. ஷியா மற்றும் சன்னி பிரிவினர் ஒருவரையொருவர் தாக்குவதும், கொன்று விடுவதும் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் சகஜம். கிட்டத்தட்ட பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் மத ரீதியான சண்டை நடைபெறுவது இந்த இரு பிரிவினருக்கு இடையேதான். ஆனால், இந்த இரு பிரிவினரும் அஹமதியா பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் போக முடியாது. இந்த மூவருமே ஷபி பிரிவு மசூதிக்குள் நுழைய அனுமதியில்லை. இந்த நான்கு பிரிவினருமே முஜாஹைதீன் இன மசூதிக்குள் செல்ல முடியாது. இது போல் இஸ்லாமில் 13 பிரிவினர் உள்ளனராம். அடேங்கப்பா தகவலா இருக்குதே... இந்த விவரம் தெரியாமல்தான் பலரும் மதம் மாறிப் போய் அவதிப்படுறாங்களாம். நல்லா தெரிஞ்சுட்டுப் போங்கப்பா..