பேய்க்கு வாக்கப்பட்டா பிணத்தைத்தான் தின்ன வேண்டும் என்பார்கள். அப்படித்தான் தி.மு.க.வில் மீண்டும் தேர்தலில் நிற்கும் காரணத்தால், உதயநிதியை தலைவராக ஏற்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகியிருக்கிறார் துரைமுருகன்.
அய்யோ பாவம்... இப்படியா மாற வேண்டும் துரை முருகன் நிலைமை..?

ஆம், எம்.ஜி.ஆர்., கருணாநிதியுடன் அரசியல் செய்தவர் துரைமுருகன். அவர் இப்போது தி.மு.க.வின் பொதுச்செயலாளராக, அதாவது கட்சியின் இரண்டாம் நிலையில் இருக்கிறார். ஆனால், அவர் உதயநிதிக்குப் பின்னால் கையைக் கூப்பியபடி வரவேண்டிய நிலைமை உருவாகிவிட்டது.
ஆம், தேர்தல் பிரசாரத்தில், துரை முருகன் அவர்களை மக்களிடம் அறிமுகம் செய்கிறார், நேற்று முளைத்த காளான் என்பதுதான். இந்த காட்சியைக் கண்டு தி.மு.க.வினரே வாய்விட்டு சிரிக்கிறார்கள்.
ஆனால், துரைமுருகனோ வாயெல்லாம் பல்லாக நிற்கிறார். பதவி என்றால் எதற்கும் துணிந்தவர்தான் துரைமுருகன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.