விஜயகாந்த் உண்மையிலே ஓட்டு போட்டாரா? யாருக்குப் போட்டார்? வைரல் புகைப்படம்!

திடீரென விஜயகாந்த் கடைசிக்கு முந்தைய நாளில் பிரசாரம் செய்ய முன்வந்தார்.


அப்போது அவராக எதையுமே பேச முடியவில்லை. அதனால், அவருக்குப் பின்னே அமர்ந்திருந்த அவரது உதவியாளர் சொல்லிக் கொடுத்ததையே திருப்பிச் சொன்னார். 

ஸ்டாலினை நம்பாதீர்கள் என்று சொன்னால், அதை அப்படியே திருப்பிச்  சொன்னார். வாக்காளர்களைக் காட்டி கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்ற உணர்வும் இல்லாமல் இருந்தார், அதையும் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது.

இப்படி இருந்த விஜயகாந்த் தானே எப்படி ஓட்டுப் போட்டார் என்று அவரது கட்சி நிர்வாகிகளே சந்தேகம் கிளப்புகிறார்கள். இன்னமும் நிர்வாகிகள், பெயர், அடையாளம் எதுவும் விஜயகாந்துக்குத் தெரியவில்லை, இந்த நிலையில், என்ன சின்னம், யார் பெயர் என்றெல்லாம் பார்த்து ஓட்டு போட்டாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இதுகுறித்து விஜயகாந்திற்கு நெருக்கமான நபரிடம் கேட்டபோது, ‘உள்ளே போய் பட்டனை அமுக்கும்படி சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் எதை அமுக்கினார் என்பது அவருக்கே தெரியாது’ என்கிறார். பரிதாபம்தான். ஆனாலும், இந்த நிலையிலும் ஓட்டுப் போட கூட்டிவந்த பிரேமலதாவை பாராட்டத்தான் வேண்டும்.