புதிய கல்விக் கொள்கை தமிழக மக்கள் மீது திணிக்கப்படும் தேசிய சூழ்ச்சி என்று எழுத்தாளர் தொல்காப்பியன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது, புதிய கல்விக் கொள்கை இல்லைங்க, ஒரு தேசிய சூழ்ச்சி. இதில் லாபம் யாருக்கு தெரியுமா?

நாட்டின் மொத்த ஜிடிபியில் 6% சதவிகிதம் கல்விக்கு ஒதுக்கப்படுகிறது – முதல் முறையாக கல்விக்காக சுமார் 1,20.000.00 அளவுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. இது பெருமையாக பேசப்படுகிறது.
இந்த பெரும் நிதியை அனுபவிக்கப் போவது யார் என்பதில் இருக்கிறது இதன் சூழ்ச்சி! சாலை ஓரத்தில் இருந்து பள்ளிக் கூடத்துக்குச் செல்லும் ஒரு மாணவனும் பிரட்&பட்டர் பேக்கோடு பள்ளிக்குச் செல்லும் ஒரு மாணவனும் ஒரே தரமானவர்களா? அந்தத் தேர்வில் வெற்றி பெறும் மானவன்தானே இந்த நிதியால் பயன் அடையப் போகிறவன்! யார் அந்த மாணவன்? அவன் எந்த சமூகத்தைச் சேர்ந்தவன்?
ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் படிக்கலாம்; இது மற்றும் ஒரு பெரிய சூழ்ச்சி. ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு தாய் மொழிக் கல்வி கட்டாயம் இல்லை என்ற பொருளில் இதை பார்க்க வேண்டும். ஒரு மாணவனின் தாய்மொழிக் கல்வி உரிமையை பறிக்கும் சூழ்ச்சி இது!
எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் க்லவி; கல்வி அடிப்படை உரிமை என்று இந்தக் கல்வித் திட்டம் சொல்ல வில்லை! எட்டாம் வகுப்பு வரையிலான படிப்புக்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு குடிமகணின் அடிப்படை கல்வி உரிமயை மறுக்கிறது.. ஒருவனுக்கு படிக்கும் சூழலை தடுப்பதன் மூலம் அவனை பள்ளிக்குச் செல்ல முடியாத, கல்வி பெறாதவனாக உருவாக்க இந்த கல்விக் கொள்கை முயல்கிறது.
ஒரு பிரிவினரை படிக்காமல் வைப்பதன் முலம் உடல் உழைப்பு சமூகத்தை நிரந்தரமாக வைத்திருக்க இந்தக் கல்விக் கொள்கை விரும்புகிறது. இந்த உடல் உழைப்புச் சமூகம் இருப்பதால் உடல் உழைப்பு இல்லாத சமூகம் வளமுடன் வாழ வழி வகை செய்கிறது இந்தக் கல்விக் கொள்கை! இது மிகப் பெரிய சூழ்ச்சி!
3+5+8 வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வுகள்: மேற்கண்ட மூன்று சூழ்ச்சித் திட்டங்களையும் செம்மையாக நிறைவேற்ற இந்த பொதுத் தேர்வுகள் திட்டம் வகை செய்கிறது. ஆரம்ப வகுப்புக்களில் இருந்து மாணவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வடி கட்டி பள்ளியில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் வெறும் உடல் உழைப்பைச் சார்ந்த ஒரு வர்க்கத்தை உருவாக்கி விடலாம். இது ஓர் அற்புதமான, நிண்டகால சூழ்ச்சி!
நாடு முழுதும் ஒரே கல்விக் கொள்கை; தொடர்ந்து மாநில சுயாட்சி குறித்த கோரிக்கைகளும் தீர்மாணங்களும் தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு வைக்கப்படுகிறது. அந்த மாநில சுயாட்சியின் தேவை என்ன? அதன் அவசியம் என்ன என்பதை இப்போதைய கொரோனா காலம் நமக்கு உணர்த்தி இருக்கிறது. மாநிலத்துக்கு ஒரு பேரிடர் என்று வரும்போது மத்திய அரசு தனது பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்வதை பல்வெறு புயல் மற்றும் பேரிடர் சம்பவங்கள் சாட்சியாக இருக்கின்றன.
இந்த கொரோனாவின் போது மத்திய அரசு ஒரு ரூபாய் கூட மாநிலங்களுக்கு நிதி அளிக்காததோடு, பேரிடர் கால பாதுகாப்பு சம்பவங்கள் எதிலும் மத்திய அரசு தனது பங்களிப்பை செய்ய முன்வரவும் இல்லை. கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், மராட்டியம், தமிழ் நாடு, ஆந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தங்களுடைய மாநில மக்களை காப்பாற்றிக் கொள்ள தாங்களேதான் முயன்று பாடுபட்டன. இவற்றில் மத்திய அரசின் பங்களிப்பு பூஜியமே!
அப்படி இருக்க கல்வி உரிமையை மட்டும் சொந்தம் கொண்டாட மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது. மாநில நலன்களில் அக்கரைக் காட்டாத மத்திய அரசு நாடு முழுக்க ஒரே கல்விக் கொள்கை என்று பேசுவது ஆகப் பெரும் சூழ்ழ்ச்சி! ஒட்டு மொத்தமாக இது மாநில உரிமைகளைப் பறிப்பது ஆகும்!
கல்வி உரிமை குறித்துப் பேசும் இந்த புதிய க்லவிக் கொள்கை கல்விக் கட்டணம் குறித்தோ, இலவசக் கல்வி குறித்தோ வாய் திறக்கவில்லை. மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்தும் ஒரு சொல் கூட இந்த திட்டத்தில் பேச வில்லை. கல்வியை தனியார் மயம் ஆக்கிக் கொண்டே கல்வி உரிமை குறித்துப் பேசுவது எத்தனிய பெரிய ஏமாற்று வேலை. எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி என்றால் தனியார் கல்வி நிறுவனங்கள் இலவசக் கல்வியை அளிக்க முன்வருமா? அது சாத்தியமா?
எந்த வகையில் பார்த்தாலும் இந்த புதிய கல்விக் கொள்கை என்பது நாட்டில் உள்ள ஏனைய மொழிச் சமூகங்களின் சுயமரியாதையை குலைப்பதாக, ஒரு குடிமகனின் அடிப்படை மொழி மற்றும் கல்வி உரிமையை பறிப்பதாகவும், சமஸ்கிருதம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளை திணிப்பதாகவுமே அமைந்து இருக்கிறது. இது மத்திய அரசின் சூழ்ச்த் திட்டம் என்பதைத் தவிர வெறு இல்லை.
இரு மொழிக் கொள்கைக்குப் பதிலாக மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. பல்வேறு காலகட்டங்களில் இதிந்திய சமூகத்தில் நிகழ்ந்து வந்த மொழித் திணிப்புகளால்தான் இந்தியர்களின் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி தடைபட்டு வந்தது.
இந்த என்பது ஆண்டு காலத்தில்தான் இருமொழிக் கொள்கையின் காரணமாக இந்தியர்கள் இடையே அறிவியல் சிந்தனிய போக்கு அதிகரித்து வரத் தொடங்கி இருக்கிறது. இத்தகைய அருமையான தருணத்தில் மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்த இருக்கும் மும்மொழிக் கொள்கை என்பது இந்திய மானவர்கள் இடையே மிண்டும் சிந்தனைக் குழப்பத்தை எற்படுத்தி அடுத்த நூற்றாண்டுகளுக்கு நமது அறிவியல் சிந்தனையை முடக்கிப் போட விழைகிறது மத்திய பாஜக் அரசு!
எனவே புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகத்தை இடர்ப்பாட்டில் தள்ள முயலும் மத்திய அரசின் சூழ்ச்சியை நாம் எதிர்த்து முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.