பிக்பாஸ் 3 வெற்றியாளர் யார்? வைரல் ஜோதிடர் பாலாஜிஹாசனின் அதிரடி கணிப்பு!

சென்னை: பிக் பாஸ் சீசன் 3 வின்னர் யார் என, பாலாஜி ஹாசன் சொன்னது பலிக்குமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பாலாஜி ஹாசன் என்ற இளம் ஜோதிடர், உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் தொடங்கிய பல விசயங்களை பற்றி பரபரப்பான ஜோசிய கணிப்புகளை சொன்னதன் மூலமாக, சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்துள்ளார். இந்நிலையில், இவர் சின்னத்திரையில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 வின்னர் யார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆம், இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் வெற்றி பெறுவார் என்றும், 2ம் இடத்தை ஒரு பெண் போட்டியாளர்தான் பிடிப்பார் என்றும், அவர் கூறியுள்ளார்.  இதை வைத்துப் பார்த்தால், வெளிநாட்டில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் 2 பேர்.

அவர்கள், இலங்கையை சேர்ந்த தர்ஷம் மற்றும் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் ஆவர். இதேபோல, லாஸ்லியா, ஷெரின் போன்றவர்கள் இறுதிச்சுற்று வரை முன்னணியில் இருக்கும் வகையில், வலம் வருகிறார்கள். இதனால், பாலாஜி ஹாசன் சொல்வது போல, ஒருவேளை முகேன் அல்லது தர்ஷம் முதலிடத்தையும், லாஸ்லியா அல்லது ஷெரின் ஆகியோரில் ஒருவர் 2வது இடத்தையும் பிடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.