விக்கிரவாண்டியில் வெல்லப்போவது யாரு? டைம்ஸ் தமிழ் பக்கா கணிப்பு

இடைத்தேர்தலில் விசித்திரமான தொகுதி என்றுதான் சொல்லவேண்டும்.


இடைத்தேர்தலில் விசித்திரமான தொகுதி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் இங்கே அ.தி.மு.க. களத்தில் நிற்கிறது என்றாலும் அதிக சீரியஸாக வேலை செய்வது பா.ம.க.வும் தே.மு.தி.க.வும்தான். ஏனென்றால், இந்தத் தொகுதியை வென்று காட்டினால்தான் அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்றம் அல்லது உள்ளாட்சித் தேர்தலில் (வருமா?) மரியாதையாக சீட்டும் நோட்டும் வாங்கமுடியும் என்று கடுமையாக உழைக்கிறார்கள்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வன் மிகவும் ஜாலியாக இருக்கிறார். ஏனென்றால் அவருக்காக 15 அமைச்சர்கள், பா.ம.க., தே.மு.தி.க.வும் கடுமையாக உழைக்கிறது. எந்தக் காரணம் கொண்டும் பா.ஜ.க. மட்டும் எட்டிப் பார்த்துவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.க.வினர் சீரியஸாகவே இருக்கிறார்கள். இங்கும் கடைசி நேரத்தில் முழு பணமும் இறக்கி வெற்றி பெற வேண்டும் என்பதைத்தான் ஃபார்முலாவாக வைத்திருக்கிறார்கள். அமைச்சர் சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. விறுவிறுப்பாக போகிறது.

அதேநேரம் தி.மு.க.வும் அதைவிட பரபரப்பாக இருக்கிறது. இங்கே வெற்றிபெற்று பா.ம.க.வின் வாய்ப்பேச்சுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் எண்ணமாக இருக்கிறது. அதனால் வேட்பாளர் புகழேந்தி இப்போதே செம ஹேப்பி. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்று ஸ்டாலின் அறிவிப்பு மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதான் ராமதாஸை அலற விட்டிருக்கிறது.

இங்கு நாம்தமிழர் சார்பில் நிற்கும் கந்தசாமியும், தமிழ் பேரரசு கட்சியின் கௌதமனும் எந்த சலசலப்பையும் ஏற்படுத்திவிட முடியாது.

ஆக, இன்றைய நிலவரம் ஸ்டாலினுக்குத்தான் சாதகமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியின் தாக்கம் இங்கேயும் தொடரவே அதிக வாய்ப்பு இருக்கிறது. கடைசி நேரத்தில் பணத்தைக் கொட்டி வாக்குகளை விலைக்கு வாங்க நினைக்கும் அ.தி.மு.க. முயற்சி விஷப்பரீட்சைதான்.