தமிழக அமைச்சரின் இதயக்கிளி யாருங்கோ..?

தென் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சருக்கு இப்போது இளமை திரும்பிவிட்டது, காதல் ஜூரத்தில் தன்னுடைய அமைச்சர் பதவியையே ஆசை நாயகிக்கு அடகு வைத்துவிட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


வேலூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் பெங்களூரு பகுதிகளில் காதல் ஜோடிகளாக சுற்றித் திரிகிறார்களாம். அது மட்டுமின்றி, தன்னுடைய சொந்த மனைவியைப் போன்று, ஆசை நாயகியுடன் தமிழகத்தில் பல ஹோட்டல்களில் சென்று சாப்பிடுகிறாராம்.

அமைச்சருடன் வரும் பெண்ணை பார்க்கும் பலரும், அவர் அமைச்சரின் மனைவி என்றுதான் நினைக்கிறார்கள். பின்னர்தான், அது அமைச்சரின் இதயக்கிளி என்பது தெரியவருகிறதாம். ஆம், அந்தப் பெண்ணை அமைச்சர் இதயக்கிளி என்றுதான் செல்லமாக அழைப்பாராம்.

அமைச்சருக்கு 67 வயது ஆகிவிட்டதை காரணம் காட்டி, அமைச்சருக்கு ஓய்வுகொடுத்துவிட்டு, அனைத்து வகையான வேலைகளையும் இதயக்கிளியே செய்து வருகிறாராம். இதனைக் கண்டு டென்ஷன் ஆகும் அ.திமு.க.வினர்தான் இப்போது தகவல்களை வெளியே அனுப்பியுள்ளனர். 

இதய்க்கிளி இன்னும் யார் யாரையெல்லாம் கொத்தப் போகுதோ..?