யார் அந்த கீர்த்தனார்? மேடையில் மீண்டும் டங்க் ஸ்லிப் ஆன ஸ்டாலின்! துண்டுசீட்டால் ஏற்பட்ட பரிதாபம்!

மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்டாலின் சீத்தலை சாத்தனார் என்று கூறுவதற்கு பதில் கீர்த்தனார் என்று கூறியிருப்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.


இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பேஸ்புக் பதில் கூறியிருப்பதாவது, துண்டு சீட்டை வைத்து படிக்காதீர்கள் என்று சொன்னால் கேட்க மறுக்கிறீர்கள்.

`கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவை' என்று `மணிமேகலை'யில் காவிரி பற்றிப் பாடுகிறார் சீத்தலைச் சாத்தனார், ஆனால், துண்டு சீட்டில் என்ன எழுதி கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்.

'பாவைக்கு' 'பார்வை' என்றும் 'தன்நிலை' என்பதை 'தான்நிலை' என்று எழுதி கொடுத்ததோடு, 'சாத்தனார்' பாடியதை 'கீர்த்தனார்' என்று கூறி உங்களை தொடர்ந்து அவமானத்திற்கு உள்ளாக்கும் அந்த துண்டு சீட்டு தயாரிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? அல்லது உடன் பிறப்புகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தற்போது இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.