ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை அமலாபால்! தனது காதல் நாயகனுடன் உல்லசமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில்!
இவ்வளவு நெருக்கமா? அமலா பாலுடன் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆண் நண்பர் யார் தெரியுமா?

ஆடை படம் பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை அமலாபாலின் புகைப்படங்களை கண்டு அதிர்ச்சி ஆனா அவர்களின் ரசிகர்களுக்கு அமலாபால் ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். அது என்னவென்றால் தனது காதல் நாயகனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவியிட்டுள்ளார். இதனை கண்ட அவர்களின் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்துவரும் நடிகை அமலாபால். விஜய்யின் தலைவா படத்தில் நடித்து கொண்டிருந்த போது அப்படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சிறு காலம் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பின்னர் அமலாபாலிடம் சினிமாவில் நடிக்க கூடாது என விஜய் கூறியதாகவும், அதை முதலில்ஏற்றுக்கொண்ட அமலா பால் பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது, பிறகு ஒரு வருடத்திலேயே இருவரும் விவகாரத்து பெற்று கொண்டனர்.
விவகாரத்து பிறகு மன உலச்சலுக்கு ஆனா அமலா பால், சிறு இடைவேளிக்கு பிறகு மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அப்படத்தில் ஆடையில்லாமல் நடித்த அமலாபாலிற்கு திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இப்படத்தினை தொடர்ந்து தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படமும் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படம் தான். அதில் சூப்பர் வுமன் அளவிற்கு அமலா பால் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் முன்னாள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில், அமலாபால் விவாகரத்திற்கு பிறகு முழு நேரமும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில் ஒருவரை காதலித்து வருவதாக சில வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது வடநாட்டு இசைகலைஞரான பவிந்தர் சிங் உடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டு உள்ளார்.
மேலும், அந்த புகைப்படங்களில் காற்று கூட புகமுடியாத அளவிற்கு அமலா பால் இறுக்கி கட்டிக்கொண்டிருக்கும் காட்சிகளை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அமலாபால் இன்னும் உறுதியான தகவலை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.