தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐந்து ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது முதல் மத்திய கேபினட் அமைச்சர் அந்தஸ்து அஜித் தோவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மோடியின் வலது கரம்! பணி நீட்டிப்பு! கேபினட் அந்தஸ்து! யார் இந்த அஜித் தோவல்!
தற்போதைய உத்தர்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அஜித் தோவல். 1968ஆம் ஆண்டின் கேரள மாநில ஐபிஎஸ் கேடராக இவர் தனது பணியைத் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்தில் மத்திய உளவுத் துறையில் இவருக்கு பணி கிடைத்தது. அதன் பிறகு வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாத செயல்களை ஒழிக்கும் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது.
சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அஜித் தோவல் சிறப்பாக செயல்பட்டார். இது மட்டுமல்லாமல் இந்தியாவின் விமானம் கந்தஹாருக்கு கடத்தப்பட்ட போது தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் இருந்த பயணிகள் அனைத்தையும் மீட்டவர் அஜித் தோவல்.
மிகச் சிறப்பான செயல்பாடுகளால் இந்திய உளவுத் துறையின் தலைமைப் பொறுப்புக்கு அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டு காலம் உளவுத் துறையின் தலைமைப் பொறுப்பிலிருந்து 2005 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அதன் பிறகு பத்திரிக்கைகள் மற்றும் செய்தித் தாள்களில் கட்டுரைகள் எழுதும் வேலையை அஜித் தோவல் செய்து வந்தார்.
இந்த நிலையில்தான் 2014ஆம் ஆண்டு மத்தியில் மோடி ஆட்சி அமைந்தது. அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். அன்று முதல் மோடியின் வலதுகரமாக அஜித் தோவல் செயல்பட்டு வருகிறார். 2014ஆம் ஆண்டு ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய போது கேரளாவைச் சேர்ந்த சுமார் 40 செவிலியர்கள் அவர்களால் சிறைபிடிக்கப்பட்டனர். அந்த செவிலியர்கள் நிலை என்ன ஆனது என்றே தெரியாத நிலையில் இந்த விவகாரத்தில் அஜித் தோவல் தலையிட்டு செவிலியர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அவர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வந்தார்.
இதற்கு காரணம் ஈராக் மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகளில் அதிகாரத்தில் உள்ளவர்கள் உடன் அஜித்துக்கு இருந்த நெருக்கமான தொடர்பு என்று சொல்லப்பட்டது. இதன்பிறகு மியான்மர் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படையினரை கொலை செய்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தை மியான்மருக்குள் அழைத்து தீவிரவாதிகளை வேட்டையாடியவர் அஜித் தோவல்.
இந்திரா காந்தி வங்கதேசத்திற்கும் ராஜீவ் காந்தி இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பிய பிறகு எல்லை தாண்டி இந்தியப் படைகள் சென்றது அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதன் பிறகுதான். தொடர்ந்து உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரை அனுப்பி தீவிரவாத முகாம்களை அளித்ததும் அஜித் தோவல் தான்.
இதைப்போல் காஷ்மீரில் துணை ராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலக்கோட்டில் செயல்படும் தீவிரவாத முகாம்களை விமானப்படை மூலம் அளித்ததற்கான வியூகத்தை வைத்தவரும் இவர்தான். அதன் பிறகு பாகிஸ்தான் இந்தியாவிற்குள் எல்லை மீறிய போது அமெரிக்கா மற்றும் சீன பாதுகாப்பு ஆலோசகர் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்ந்தால் இந்தியா எவ்வளவு தீவிரமான நடவடிக்கையும் எடுக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தன் சிறை பிடித்து வைத்திருந்த அபிநந்தன் விடுவித்தது. இப்படி கடந்த மூன்று ஆண்டுகளில் மோடியின் இமேஜை காப்பாற்றும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வரும் அஜித் தோவல் தற்போது கேபினட் மந்திரி அத்துடன் மேலும் 5 ஆண்டுகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மோடியின் வலதுகரமாக நீடிப்பார்.