கல் உப்பு நல்லதா தூள் உப்பு நல்லதா?? மருத்துவ உண்மை எது?

நம் உடலில் உப்பு அளவு அதிகரித்தாலும், குறைந்தாலும் பிரச்னை உண்டாகிறது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு இரண்டு கிராம் உப்பு போதுமானது. அயோடின் கலந்த டேபிள் சால்ட் பயன்படுத்துவதைவிட, கல் உப்பே நல்லது.


நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், கீரைகளில் இயற்கை உப்பான சோடியம் குளோரைடு கலந்திருக்கிறது என்பதால் அதிகமான உப்பு போடவேண்டிய அவசியம் இல்லை.

·         உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. மேலும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் உருவாகவும் உப்பு காரணமாகிறது.

·         உப்பு அளவு குறையும்போது மந்த புத்தி உண்டாகிறது. மேலும் முன் கழுத்து கழலை நோய்க்கும் அயோடின் குறைபாடே காரணமாகிறது.

·         ரெடிமேட் உணவுகள், ஊறுகாய் போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படுகிறது. இது அஜீரணம், குடல் நோய்களுக்கு காரணமாகிறது.

·         அதிக உப்பு கொண்ட வடாம், வத்தல், மோர் மிளகாய் போன்றவையும் உடலுக்கு ஆபத்து விளைவிப்பதே.

நடை பயிற்சி, ஓட்டம், நீச்சல் போன்ற உடற்பயிற்சியின் மூலம் வியர்வை அதிகமாக வெளியேறும்போது, உடலில் தேவையற்ற உப்பும் வெளியேறுகிறது.