விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையில் எது நல்ல வங்கி? பொதுத்துறை வங்கியா, கூட்டுறவு வங்கியா?

தமிழக அமைச்சர்களிலேயே அதிரடிக்கு பெயர் போன அமைச்சர் செல்லூர் ராஜு சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் போரூர் கிளையை நேற்றுத் திறந்து வைத்துப் பேசினார்.


அது சென்னனை மத்திய கூட்டுறவு வங்கியின் 70 கிளை. அதோடு,279 பயனர்களுக்கு 2,35,43,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அடுத்த படியாக மத்திய அரசின் ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் என்று டெல்லி எஜமானர்களுக்கான கடமையை நிறை வேற்றினார்.அதோடு

அமெரிக்க முதலீட்டாளர்களை தமிழகத்துக்கு அழைத்துவரப்போய் இருக்கும் தன் தலைவன் எடப்பாடி நினைவு வந்து விட,முதல்வர் அமெரிக்காவில் பல தொழிலதிபர்களை சந்திக்கிறார்,பல தொழில் நுட்பங்களை பார்வை இடுகிறார், அது பற்றி நாடு திரும்பியதும் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று அந்த கடமையையும் நிறை வேற்றினார்.

அதோடு,முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட உடனே தொழிற்சாலை தமிழகத்துக்கு வந்துவிடாது.7 ஆண்டுகளுக்குள் எப்படியும் வந்துவிடும் என்று எஸ்கேப் ரூட்டையும் ஒழுங்கு செய்து வைத்தார்.அப்போதும் நிறைய நேரமிருந்ததாலும்,பார்வையாளர்கள் அசட்டையாக இருந்ததாலும் தனது கண்டுபிடிப்பு ஒன்றை எடுத்து விட்டார்.

இது தர்மாக்கோல் திட்டம் போல அறிவியல் கண்டுபிடிப்பல்ல,இப்போதைய சீசனுக்கு ஏற்ற பொருளாதாரம் குறித்த கண்டுபிடிப்பு.எந்த வங்கி சிறந்தது,பாதுகாப்பானது, பொதுத்துறை வங்கிகளா? கூட்டுறவு வங்கிகளா? என்கிற சந்தேகத்துக்கு,செல்லூர் ராஜு ஒரு ஈசி சொலுவ்ஷன் சொல்லி இருக்கிறார் இந்தக் கூட்டத்தில்.

அதாவது,எல்லா வங்கிகளும் ஒன்றுதான் என்றாலும்,தேசியவங்கிகளில் ஒரு முக்கியமான குறை இருப்பதை செல்லூரார் கண்டுபிடித்து விட்டதோடு,அதை இப்படி விளக்கவும் செய்தார்' தேசிய வங்கிகளில்தான் கொள்ளைகள் நடக்கும்,கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை முயற்சி மட்டுமே நடக்கும்!.ரொம் படிரைப் பண்ணி இருப்பாரோ.