சீக்கிரம் வயதுக்கு வருவது பெண் பிள்ளைகள் கறுப்பு நிறமா அல்லது சிவப்பு நிறமா? ஆச்சர்யமான தகவல்!

வெள்ளை மற்றும் சிவப்பு நிறப் பெண்களைவிட கறுப்பு நிறப் பெண் பிள்ளைகளே சீக்கிரமே பருவம் அடைகின்றனர் என்பதை அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் உள்ள மவுன்ட் சினாய் மருத்துவப் பள்ளி மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனையினர் ஆய்வு மூலம் கண்டறிந்து உள்ளனர்.


* உடல் நிறம், எடை, உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் போன்றவைகளைக் கொண்டு நடத்திய ஆய்வில் நிறத்துக்கும் பூப்படைதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

* அதிக உடல் எடை உள்ளவர்களின் கொழுப்புச்சத்தானது, செக்ஸ் ஹார்மோனைத் தூண்டி விரைவில் சுரக்கச் செய்வதால் சிறு வயதிலேயே பலர் வயதுக்கு வருகிறார்கள்.

  கறுப்பு நிறப் பெண்களுக்கு சீக்கிரம் பூப்படையும் வாய்ப்பு இருப்பதால், சின்ன வயதிலேயே பருவம் அடைதல் பற்றி சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் மன அழுத்தத்தில் இருந்து குழந்தைகள் தப்பிக்க முடியும்.