ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இப்போது பா.ஜ.க. மிகவும் குஷியாக இருக்கிறது. அதாவது இதுவரை நடந்துமுடிந்த தொகுதிகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 75 தொகுதிகள் கிடைப்பதே கடினம் என்று ஐ.பி. ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.
மோடியின் பதவி ஏற்பு எங்க தெரியுமா? இப்பவே வேலையை ஆரம்பித்து பரபரக்கும் பாஜக!

அதனால், மீதமுள்ள கட்டங்களில் ஓரளவு ஜெயித்தாலும் 120க்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று உறுதியாகி விட்டதாம். அதனால் இப்போதே வெற்றிவிழாவை கொண்டாடத் தயாராகிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த முறை அவரது பதவியேற்பு விழா மக்கள் மத்தியில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால் வாரணாசியில் பொதுமக்கள் முன்னிலையில் பதவியேற்று சாதனை படைக்க இருக்கிறாராம்.
இந்த விவகாரம் குறித்து உள் துறைக்கும், குடியரசுத்தலைவர் மாளிகைக்கும் தகவல் அனுப்பி ஒப்புதல் பெற்றுவிட்டார்களாம். அதனால், வாரணாசியில் பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தைக் கண்டறியும் பணி நடைபெறுகிறது. இந்த விழாவை நேரடி ஒளிபரப்பாக உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்கும் பணியும் நடைபெறுகிறது. மக்கள் கவனத்தைக் கவர்வதற்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாம். யார் யாரெல்லாம் ஆடப்போறாங்க, பாடப் போறாங்க என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
தி.மு.க.தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்னரே கனவில் மிதக்கிறது என்றால், பா.ஜ.க.வுமா... அச்சோ பாவம்தான்.