உதயநிதி எங்கேப்பா? கருணாநிதி நினைவு தினத்தில் நிர்வாகிகள் தேடுதல் வேட்டை!

கருணாநிதி மறைந்து ஓர் ஆண்டு ஆனதையடுத்து, இன்று தி.மு.க. சார்பில் பிரமாண்ட விழா எடுத்து கொண்டாடப்பட்டது.


சிறப்பு விருந்தினராக மேற்கு வங்காளத்தில் இருந்து மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அவருக்கு விமானநிலையத்தில் வரவேற்பு கொடுத்து அழைத்துவந்தது சின்னவர் என்று செல்லமாக அழைக்கப்படும் உதயநிதிதான்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் சிலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இங்கு வைத்துத்தான் அவர் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார், அதனை நினைவுபடுத்தும் வகையில், கருணாநிதி உட்கார்ந்து எழுதுவது போன்று சிலை வடிக்கப்பட்டிருந்தது. 

இந்த சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். மம்தா பானர்ஜியுடன் நாராயணசாமி, கி.வீரமணி, வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து மெரினாவிற்கு தலைவர்கள் கிளம்பினார்கள். அங்கு அண்ணா, கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த அத்தனை நிர்வாகிகளும் ஸ்டாலினை பார்த்துப் பேசுவதைவிட, உதயநிதியை சந்தித்துப் பேசத்தான் ஆசைப்பட்டார்கள். ஒரே ஒரு போட்டோ அவருடன் எடுத்துக்கொண்டால் போதும் என்று பெரிய பெரிய நிர்வாகிகளும் அலைந்ததுதான் பரிதாபம்.

இதைக் கண்டு உதயநிதி அவ்வப்போது ஒளிந்துகொண்டாலும், அவரைத் தேடிப்பிடித்து பேசுவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் வரிசையில் நின்றதுதான் கொடுமை.

என்ன செய்றது பொழைப்பைப் பார்க்கணுமே!