இந்தியாவுக்கு எப்போ வருவார் விஜய் மல்லையா..? சிறைக்குப் போவதாக சொல்வது உண்மைதானா..?

இந்தியாவில் இருந்து ஜாலியாக தப்பிச்சென்ற விஜய் மல்லையா, மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பும் நாள் நெருங்கிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து விசாரித்தால், வரலாம், வராமலும் போகலாம் என்று சொல்கிறார்கள், அரசியல்வாதிகள்.


இந்தியாவில் உள்ள வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இதற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவை லண்டன் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மல்லையாவை திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

கடந்த மே 14 அன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான மல்லையாவின் வாதங்கள் தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து அவர் மேலும் 28 நாட்களில் முறையீடு செய்ய கெடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

எனவே இந்த மாதம் அவர் மேல் முறையீடு செய்வார். அதன்பிறகு மீண்டும் விசாரணை நடக்கும். அந்த விசாரணை முடிவடைய இன்னமும் எப்படியும் மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. அதனால், இப்போதே மும்பை ஜெயிலில் விஜய் மல்லையாவுக்கு ரூம் தயாராக இருக்கிறது என்று சொல்வதை யாரும் நம்பாதீங்க.