தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா? இதோ முதல்வரே சொன்ன பதில்.

இன்னும் நான்கே மாதங்களில் தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால், முன்கூட்டியே தேர்தல் நடக்க இருப்பதாக ஒருசில கட்சிகள் பொய் பிரசாரம் செய்துகொண்டு இருக்கின்றன.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி படு ஸ்பீடாக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் கூட்டணி முடிவாகிவிடும் நிலையும் உள்ளது. கூட்டணியும் முடிவாகிவிட்டால், தேர்தல் பிரசாரம் இன்னமும் சூடு பிடித்துவிடும்.

அதனால்தான், எப்படியாவது முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனவாம். இந்த விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு இருந்த சந்தேகங்களைத் தீர்த்துவைத்தார்.

ஆம், ‘வரும் ஏப்ரல் மாதம் இறுதியிலோ, மே மாதம் முதல் வாரத்திலோ சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.‘ என கூறியிருக்கிறார். இதனை அ.தி.மு.க. ஐ.டி. விங்கிற்கு தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இன்னமும் வேகத்தை அதிகப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம்.