அதிவேகத்தில் அரசுப் பேருந்து..! சாலையில் கழன்று ஓடிய டயர்! பயணிகளின் திக்திக் அனுபவம்! தருமபுரி சம்பவம்!

வடிவேல் படம் பாணியில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்து டயர் கழன்று ரோடில் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரியில் இருந்து கடத்தூர் வழியாக கேத்து ரெட்டி பட்டியை சேரும் பேருந்து வழக்கம் போல பயணைகளை ஏற்றிக்கொண்டு இயங்கி கொண்டிருந்தது. இந்த நிலையில் வழக்கம் போல பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறபட்ட நிலையில், வேங்கடதார அள்ளி புதூர் அருகே சென்று கொண்டிருந்த போது, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், திடீரென சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தின் டயர் லூசாகி கழண்டு சாலையில் தனியாக ஓட்டம் பிடித்துள்ளது. 

இதனை கண்ட ஓட்டுநர் பேருந்தினை சாமர்த்தியமாக கையாண்டு , நிலைதடுமாறிய பேருந்தை கட்டுக்குள். கொண்டு வந்துள்ளார். இதனை அடுத்து பேருந்தில் பயணித்து கொண்டிருந்த பயணிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் எந்த வித அசம்பாவிதமும் நேராமல் காப்பாற்றபட்டனர். 

சரியான நேரத்தில் சாமர்த்திதமாக செயல்பட்டு நிகழ இருந்த விபத்தை லாவகமாக கடந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.