நீரிழிவு நோயாளிக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

காய்ச்சல் வந்தால் பொதுவாகவே அனைவரும் சோர்வு அடைந்துவிடுவார்கள். நீரிழிவு நோயாளிகளுக்குக் காய்ச்சல் ஏற்படும்போது பாதிப்பு மிகவும் அதிகம் இருக்கும் என்பதால் உடனடி சிகிச்சையும் தகுந்த முன்னேற்பாடும் அவசியம் என்று எச்சரிக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.


* சாதாரண காய்ச்சல், ஃப்ளூ ஜுரம் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும்போது, நோயை எதிர்த்து உடல் எதிர்ப்பு சக்திகள் போராடும். அப்போது ஹார்மோன்கள் அதிக அளவில் வெளியேறி ரத்த சர்க்கரை அளவை நிச்சயம் பாதிக்கும்.

* அதனால் நீரிழிவு நோயாளிகள் காய்ச்சலுக்கான மருந்துகளை உடனடியாக மருத்துவரை சந்தித்து எடுத்துக்கொள்ள வேண்டும். தாமதம் செய்யும் ஒவ்வொரு மணி நேரமும் அவர்களுக்கு பிரச்னை அதிகமாகும்.

* டயட் உணவு மேற்கொள்ளாமல் சூப், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு காய்ச்சல் வந்தால் வேறு சில தொற்று நோய்கள் தாக்குவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதால் அவர்களைத் தனியாகப் பாதுகாக்க வேண்டும். வேறு நோய் தாக்குதல் ஏற்படவில்லை என்பதையும் பரிசோதனை மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.