உடலுறவின் போது ஆண்களின் மனதில் எழும் விசித்திரமான கேள்விகள்! என்னென்ன? ஏன் தெரியுமா?

பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் ஈடுபடும்போது அவர்களின் கவனம் வேறு எதை நோக்கியோ இருக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடலுறவின்போது தங்கள் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைத்தான் அதிகம் கவனிக்கிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


அதேசமயம் உடலுறவின்போது அதில் மட்டுமே ஆண்கள் கவனம் செலுத்துவதில்லை என்ற தகவலையும் அவர்கள் தெரிவிக்கின்றனர். உடலுறவின்போது ஆண்கள் தங்கள் உடலில் இருந்து வெளிவரும் வாசனையைப் பற்றி அக்கறை கொள்கிறார்கள். வியர்வை வெளிவருகிறதா என்பதை கவனிப்பார்கள். உடலுறவின் போது பல ஆண்கள் மனதிற்குள் பாடுகிறார்கள். எதற்காக என்றால் ஆண்கள் உச்சக்கட்டம் அடைவதாக உணரும்போது அதனை திசைதிருப்பவதற்காக பாடுவதாகவும் அது பலனை அளிப்பதாகவும் ஆண்கள் கூறுகிறார்கள். 

பெண்ணை நிர்வாணமாக பார்க்கும் போது ஆண்கள் முன்விளையாட்டுகளில் நேரடியாக அனுபவிக்கிறார்கள். எனவே தங்கள் மனதிற்குள் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்து ஆண்களுக்குமே படுக்கையில் ஒரு சந்தேகம் இருக்கும் அவர்களின் செயல்கள் துணைக்குப் பிடிக்குமா என்ற சந்தேகமும், அச்சமும் அவர்களுக்கு இருக்கும். எனவே அவர்கள் புதிதாக முயற்சிக்க விரும்பாமல் வழக்கமான செயல்களையே தொடருகிறார்கள். பெண்கள் பெரும்பாலும் பல்வேறு விதமான சிந்தனைகளில் இருப்பார்கள்.

ஆண்களுக்கு மட்டுமே ஆணுறையால் ஏற்படும் பிரச்சினைகளை அறிவார்கள். புணர்ச்சியின் போது அது விலகி விட்டதா அல்லது கிழிந்து விட்டதா என்ற சிந்தனை அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். அதேபோல தங்கள் துணை பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால் அதனை எடுத்துக் கொண்டார்களா என்று யோசிப்பார்கள் 

ஆண்களுக்குமே நீண்ட நேரம் உறவில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை இருக்கும். எனவே உறவின் போது இடையில் நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெரும்பாலான ஆண்கள் தங்கள் துணையின் உச்சக்கட்டத்தை பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஆண்கள் உண்மையில் துணையின் உச்சக்கட்டத்தின் மீது அக்கறை செலுத்துவார்கள்.