என்னடா இது வெங்கடாஜலபதிக்கு வந்த சோதனை? திருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் விளம்பரம்! எல்லாம் ஜெகன்மோகன் ரெட்டி கை வரிசையாம்!

திருப்பதி பேருந்து டிக்கட்டில் ஜெருசலேம் பயண விளம்பரமா? ஆந்திராவில் பதற்றம்!


ஆந்திராவின் புதிய முதல்வராக பதவி ஏற்று பல அதிரடிகளை செய்து வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக, திருப்பதி பஸ்டிக்கெட் உருவத்தில் ஒரு பூதம் கிளம்பி இருக்கிறது. பஸ்டிக்கெட்டின் பின்னால் பலவிதமான வர்த்தக விளம்பரங்களை அச்சிட்டு ஆந்திராவின் மாநில போக்குவரத்து கழகம் தனியாக வருமானம் பார்த்து வருகிறது.

அது போன்ற ஒரு விளம்பரம்தான் இந்தப் பதற்றத்துக்கு காரணம்.அது கிறிஸ்தவர்களின் புன்னிய ஸ்தலமான ஜெருசலேம் நகருக்கு மானியத்தில் பயணம் செய்வது எப்படி என்பது பற்றிச் சொல்கிறது. ஆனால் அச்சிடப்பட்டு இருப்பதோ திருப்பதி திருமலை போகும் பயணச்சீட்டு!.

ஜெகன் மோகன் பதவி ஏற்ற உடனே. சந்திர பாபு நாயுடு அரசால் நியமிக்கப் பட்டிருந்த திருப்பதி தேவஸ்தான பொறுப்பில் இருந்தவர்கள் பதவி விலக ,ஜெகன் தனது மாமா ஒய்.எஸ் சுப்பா ரெட்டியை திருப்பதி தேவஸ்தான தலைவராக நியமித்தார்.அதற்கு அப்போதே எதிர்புக் கிளம்பியது.

சுப்பா ரெட்டி ஒரு தீவிர கிறிஸ்த்தவர்,அவரை எப்படி திருப்பதி தேவஸ்தானத்தின் ஐம்பதாவது தலைவராக நியமிக்கலாம் என்று கேள்வி எழுந்தது.அதற்கு,இது போன்ற குற்றச்சாட்டுகள் தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாகச் சொன்ன சுப்பா ரெட்டி,தான் வருடந்தோறும் இருமுடிகட்டி சபரிமலைக்குப் போகும் தீவிர இந்து,நான் இந்துவாகத்தான் பிறந்தேன் ,இந்துவாகத்தான் சாவேன் என்று ஆக்ரோஷமாக பதில் அளித்து இருந்தார்.

அத்துடன் என்னைக் சந்தேகிப்பவர்கள் ஹைதராபாத்தில் இருக்கும் எனது வீட்டுக்கோ,ஓங்கோலில் இருக்கும் வீட்டுக்கோ எப்போது வேண்டுமானாலும் வந்து என் வீட்டில் எப்படிப்பட்ட பூஜைகள் நடக்கிறது என்று அவர்களே நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றும் சொல்லி இருந்தார்.

இப்போது திருமலைக்குப் போகும் பஸ்ஸில் கிறிஸ்த்தவ சமைய விளம்பரத்தை எப்படி அனுமதித்தீர்கள் என்ற கேள்வி விசுவரூபம் எடுத்திருக்கிறது.இப்போதைக்கு பிஜேபியின் ஆந்திர மாநில தொண்டர்கள் மட்டுமே இதைக் கண்டித்து பேசி வருகின்றனர். ஜெகனால் முழுக்க முழுக்க ஓரங்கட்டப் பட்டுவிட்ட சந்திரபாபு நாயுடு இந்தச் சந்தர்ப்பத்தை எப்படி பயண்படுத்திக் கொள்ளப் போகிறார் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.