அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்றின் காரணமாக ஈரப்பதம் உள்ள காற்று வட இந்தியாவில் உள்ள காற்றை குளிர்ச்சியடைய வைக்கிறது.
வடகிழக்கு பருவமழை என்றால் என்ன? அக்டோபர் To டிசம்பர் தமிழகத்தில் மழை கொட்டுவது ஏன்?

வட இந்தியாவில் உள்ள காற்றின் அடர்த்தி அதிகமாகிறது. அதே சமயத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதி காற்று சூடாக உள்ளதால் அவை அடர்த்தி குறைவாக உள்ளன. இதனால் வட இந்தியாவில் இருந்து காற்று தெற்கு நோக்கி வீசத் தொடங்குகின்றன. வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசுவதால் இக்காற்றை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று என்கிறோம்.
அவ்வாறு வீசும் போது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை கொணரும் இக்காற்று தக்காண பீடபூமிக்கு மழையை கொண்டுவருகிறது. இந்தக்காற்றினால் கரையோர ஆந்திரப்பிரதேசம், இராயலசீமை, தமிழகத்தின் கரையோரம், பாண்டிச்சேரி மற்றும் இலங்கையின் கிழக்கு கரையோர பகுதிகள் மழை பெறுகின்றன.
தென்மேற்கு பருவக் காற்றினால் குறைந்த அளவு மழையை பெறும் தமிழக கரையோரப் பகுதிகள் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் 60% மழையை பெறுகின்றன. தமிழகத்தின் உள் பகுதிகள் 40% - 50% மழையை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன. தென்மேற்கு பருவக்காற்றினால் மழையைப்பெறும் கர்நாடகம், கேரளா, இலட்சத்தீவுகள்போன்றவை 20% மழையை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன.
வடகிழக்கு பருவமழை - ஒரு பார்வை!
பொதுவாக இந்த மழை இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நிகழும். அதிக மழை என்பது பொதுவாக இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நிகழும். பொதுவாக பின் இரவு முதல் காலை வரை மழை என்பது வடக்கிழக்குப் பருவ மழையின் குணாதிசயம். குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவை அருகாமையிலுள்ள காலங்களில் நாள் முழுவதும் தொடர் மழை நீடிக்கும்.
வடகிழக்குப் பருவமழை என்பது தொடர்மழையாக மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கும். நான்கு நாட்களுக்கு மேல் தொடரும் நிகழ்வுகள் என்பது 20 சதவீதத்திற்கும் குறைவாக நடக்கும் நிகழ்வுகள் ஆகும். வறண்ட வானிலையோ / குறைந்த அல்லது மழையோ இல்லாத நீண்ட தொடர் நாட்கள் என்பது சாதரணமாக இந்தக் காலக் கட்டங்களில் நடக்கும் நிகழ்வுதான்.