நடிகை மும்தாஜூக்கு என்ன ஆச்சு? மகள் சற்று முன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

பழம் பெரும் பாலிவுட் நடிகை மும்தாஜ் இறந்து விட்டார் என்று பரவிய வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அவரது மகள் தான்யா மத்வானி எனது அம்மா மும்தாஜ் நலமுடன் ஆரோக்கியமாக தான் உள்ளார் என்று ஒரு விடியோவை ஷேர் செய்துள்ளார்.


பாலிவுட்டின் பழம் பெரும் நடிகை மும்தாஜ், சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணா , ராஜேந்திர குமார் மற்றும் தர்மேந்திரா ஆகிய பழம் பெரும் கதாநாயகர்களுடன் இவர் நாயகியாக நடித்துள்ளார். இவர் 1960 காலங்களில் பாலிவுட்டின் முன்னணி நாயகியாகவும் திகழ்ந்தார். 72 வயதான நடிகை மும்தாஜ் இறந்து விட்டதாக சிலர் ட்விட்டரில் வதந்திகளை பரப்பி வந்தனர்.

இதனால் கடுப்பாகிய அவரது மகள் எந்த ஆதாரமும் இல்லாமல் சிலர்  என் அம்மா இறந்து விட்டார் என்று ட்விட்டரில் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த செய்திகளால் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் அவர்களை பிடித்தவர்கள் எவ்வளவு துயரத்திற்கு ஆளாவார்கள் என்றது அவர்கள் நினைத்து கூட பார்ப்பதில்லை. 

இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அவர் மகள் தான்யா மத்வானி வெளியிட்ட விடியோவால் பாலிவுட் சினிமா ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வெளிவந்துள்ளார்கள்.