அவ்வப்போது ஒரு வீடியோவை தி.மு.க. ஐ.டி. கண்மணிகள் நெட்டில் உலவ விடுவார்கள்.
மகனை பற்றி ஸ்டாலின் சொன்னது என்னாச்சு! யூ டியூப்பில் காணாமப் போயாச்சு!
உங்கள் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்று ஸ்டாலினிடம் அப்பாவியாக ஒருவர் கேள்வி கேட்பார். உடனே அந்தக் கேள்விக்கு ஸ்டாலின், ‘என்னுடைய குடும்பத்தில் இருந்து எனது மகனோ அல்லது எனது மருமகனோ என்று யாரும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன்’ என்று பேசியிருப்பார் ஸ்டாலின்.
நேற்று உதயநிதியை இளைஞரணி செயலாளராக அறிவித்தவுடன், பலரும் அந்த வீடியோவைத்தான் இணையதளத்தில் தேடினார்கள். தி.மு.க.வினர் அத்தனை தூரம் மக்கா என்ன..? அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்தே தூக்கிவிட்டார்கள். இதில் எத்தனை தூரம் தெளிவாக இருக்கிறார்கள் என்று தி.மு.க.வினரே வியந்து ஸ்டாலினை பாராட்டித் தள்ளுகிறார்கள்.
அது சரி, எப்போ சார் இன்பநிதியை மாணவர் அணித் தலைவரா அறிவிக்கப் போறீங்க..?