இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறது பா.ஜ.க.? டென்ஷனில் எடப்பாடி!

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்கு சதவிகிதம் என்று பார்த்தால், கட்சியின் நிலவரம் கலவரமாகத்தான் இருக்கும். ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு தமிழக பா.ஜ.க.வும் கெத்து காட்டிக்கொண்டு இருக்கிறது.


கடந்த வேலூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேண்டாம் என்றுதான் அ.தி.மு.க. கருதியது. அதனால்தான் மோடி புகைப்படம், போஸ்டர் எதுவுமே போடாமல் தேர்தல் வேலை செய்தது. ஆனாலும் தோற்றுப்போனது வேறு கதை.

இந்த நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக விஜய்காந்த், ராமதாஸ், கிருஷ்ணசாமி ஆகியோரிடம் ஆதரவு கேட்ட அ.தி.முக., பா.ஜ.க.வை கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரம்தான் பெரிதாக வெடித்துள்ளது.

இனிமேல் அ.தி.மு.க.வுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது. பா.ஜ.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், பா.ஜ.க.வின் உண்மையான பலத்தை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த ஆசையை குப்பையில் போட்டுவிட்டனர்.

எங்களுடைய வோட்டு இல்லாமல் அ.தி.மு.க. எப்படி ஜெயிக்கிறது என்று பார்க்கிறோம் என்று சவால் விட்டிருப்பதைக் கண்டு எடப்பாடியார் கடும் டென்ஷனில் இருக்கிறாராம். ஏனென்றால் பா.ஜ.க.வுக்கு சொந்தமான பத்து அல்லது இருபது ஓட்டு வித்தியாசத்தில்தான் தோல்வி இருக்குமோ..?