தைராய்டு சுரப்பியில் சிக்கல் வந்தால் என்ன பிரச்னை வரும் தெரியுமா?

கழுத்துக்கு அடிப்பாகத்தில் மூச்சுக் குழாயின் முன்புறம் உள்ள நாளமில்லா சுரப்பிதான் தைராய்டு சுரப்பி ஆகும். இதில் குறைபாடு ஏற்பட்டால் உடல் வளர்ச்சி குன்றவும் பலம் குறையவும் நேரிடலாம். அதிகமாக சுரந்தால் மிகவும் குன்டாக அல்லது உயரமாக வளர்வதற்கு வாய்ப்பு உண்டு.


* பருவ வயதில் பெண்களுக்கு அதிகமான தைராய்டு ஹார்மோன் தேவைப்படும் என்பதால், சுரப்பியில் வீக்கம் தென்படலாம். இவர்களுக்கு அயோடின் கலந்த உப்பைக் கொடுத்தாலே குணம் தெரியும்.

* மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அயோடின் குறைபாடு இருப்பதன் காரணமாக தைராய்டு சுரப்பி வீங்குகிறது.

* தைராய்டு அதிகமாக சுரப்பதால் நெஞ்சு படபடப்பு, அதிக வியர்வை, கை, கால் நடுக்கம், எடை குறைவு, அதிக பசி, தூக்கமின்மை போன்ற பிரச்னையும் குறைவாக சுரந்தால் உடல் பருத்தல், தோல் வறண்டு போதல், ரோமங்கள் உதிர்தல், சோர்வு, மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படலாம்.

தைராய்டு கட்டிகளில் ஏற்படும் பிரச்னைக்குப் பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவை இல்லை. ஆனால் ரத்தக் கசிவும் புற்று நோய் வாய்ப்பும் இருப்பதாக அறிய நேர்ந்தால் நிச்சயம் அறுவை சிகிச்சை செய்யவேண்டும்