திகாரில் ப.சிதம்பரத்திற்கு என்னென்ன வசதிகள்? டெல்லி சிறைத்துறை டிஜிபி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

திகார் சிறையில் ப.சிதம்பரத்திற்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டள்ளன என்கிற விவரத்தை டெல்லி சிறைத்துறை வெளியிட்டுள்ளது.


நீதிபதி, ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து உடனடியாக அவர் டெல்லி திகார் சிறைக்கு கொண்டு வரப்பட்டார். காவல்துறையினர் வழக்கமாக கைதிகளை சிறைக்கு அழைத்துச் செல்லும் கருப்பு நிற வேனில் தான் அவர் கொண்டு செல்லப்பட்டார்.

உள்ளே தனியாக அமர வைக்கப்பட்டிருந்த சிதம்பரம் பத்திரிகையாளர்களை நோக்கி கைகளை அசைத்தார். இதன் பிறகு அவர் நேராக திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிறைக்கு சென்றதும் முதலில் ப.சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பிறகு அவரது அங்க அடையாளங்கள் சோதிக்கப்பட்டன. தொடர்ந்து சிறை எண் 9ல் உள்ள வார்ட் எண் 7ல் சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

சிதம்பரத்திற்கு சிறையில் என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள என்று டெல்லி சிறைத்துறை டிஜிபி சந்தீப் கோயலிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஜெயில் என்றால் ஜெயில் தான். யாருக்கும் அங்கு சிறப்பு வசதிகள் எல்லாம் கிடையாது என்று ஒரே போடாக போட்டார்.

மேலும் சிதம்பரம் கைது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படியும் சிறை விதிகளின் படியும் அதிகாரிகள் செயல்படுவர் என்று முடித்துக் கொண்டார்.