அற்புதம்மாவுக்கு அமித்ஷா சொன்ன பதில் என்ன தெரியுமா? பேரறிவாளன் வெளியே வர முடியுமா?

நேற்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தன்னுடைய மகனின் விடுதலை குறித்து வேண்டுகோள் வைத்தார்.


நேற்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தன்னுடைய மகனின் விடுதலை குறித்து வேண்டுகோள் வைத்தார். அவரை திருமாவளவன் அழைத்துச்சென்று அமித்ஷாவை பார்க்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அமித்ஷாவிடம் பேசிய அற்புதம்மாள், ‘ராஜீவ் கொலை வழக்கிற்கும் எனது மகன் பேரறிவாளனுக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரி தியாகராஜன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தபோதே எனது மகன் விடுதலையாவார் என்று எதிர்பார்த்தேன்’ என்று கூறியிருக்கிறார்.

அதனை முழுமையாக கேட்டுக்கொண்ட அமித்ஷா, எந்த பதிலும் சொல்லவில்லையாம், ஆனால், அற்புதம்மாவுக்கு ஆறுதல் மட்டும் கூறியிருக்கிறார். இதையடுத்தே, ‘நம்பிக்கையின் பேரில் அமைச்சரை சந்தித்தேன். அவரும் ஆலோசனை செய்து முடிவு எடுப்பதாக கூறியிருக்கிறார்’ என்று மீடியாவில் தெரிவித்தார் அற்புதம்மாள்.

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில்லை என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அந்த விவகாரத்தில் பா.ஜ.கவும் உறுதியுடன் இருக்கும் என்றே தெரிகிறது. அதனால், பேரறிவாளன் விடுதலைக்கு வாய்ப்பு இல்லை.