வெஸ்டர்ன் டாய்லெட்! நீதிபதியிடம் ப.சிதம்பரம் கேட்ட ஒரே ஒரு வசதி!

சிறையில் தனக்கு வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லெட்டுடன் தனி அறை வேண்டும் என்கிற ஒரே ஒரு கோரிக்கை மட்டும் ப.சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.


15 நாள் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வாதிட்டது.

சிதம்பரத்தை ஜாமீனில் விடுவித்தால் சாட்சியங்களை ஒன்னும் இல்லாமல் ஆக்கிவிடுவார்எ ன்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் ப.சிதம்பரம் மீது தற்போது வரை அப்படி சாட்சிகளை கலைத்ததாக குற்றச்சாட்டு கூட இல்லை என்று அவருக்காக ஆஜரனா அபிசேக் மனு சிங்வி கூறினார்.

மேலும் ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை முன்பு சரண் அடைய சிதம்பரம் தயாராக இருப்பதாகவும் எனவே அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சிங்வி வாதிட்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, சிதம்பரத்தை 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அப்போது எழுந்த பசிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், இசட் கேட்டகிரி பாதுகாப்பில் உள்ள தனது கட்சிக்காரருக்கு அதற்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக சிதம்பரத்திற்கு வெஸ்டர்ன் ஸ்டைல் பாத்ரூம் மற்றும் டாய்லெட் வசதி வேண்டும் என்று வாதிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அந்த வசதியை செய்து தருமாறு சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.