ஊருக்குள் புகுந்த கொடிய விஷம் கொண்ட இரட்டை தலை பாம்பு..! ஆனால் ஊர் மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

முதன்முதலாக இரட்டைத்தலை கொண்ட நாகத்தை பார்த்த கிராம மக்கள் அதனை கடவுளின் புராணக் கதைகளோடு ஒப்பிட்டு வனத்துறையினர் இடம் தர மறுத்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது.


மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியை அடுத்த ஏகருகி கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் டெல்டா வனப் பகுதிக்கு மிக அருகாமையில் இருப்பதால் அவ்வப்போது வனவிலங்குகள் கிராமத்திற்குள் வருவது வழக்கம் அந்த வகையில் இரட்டை தலை நாகமொன்று கிராமத்திற்குள் வந்துள்ளது.

இதனை கண்ட கிராம மக்கள் அதிசயத்துடன் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதனை கடவுள்களின் புராணக் கதைகளோடு ஒப்பிட்டு கடவுளாகவே மாற்றிவிட்டனர். இதையடுத்து தகவலறிந்து கிராமத்திற்கு சென்ற வனத்துறையினர் பாம்பினை மீட்க முயற்சித்த பொழுது கிராம மக்கள் பாம்பை தர மறுத்துள்ளனர்.

மேலும் இதையடுத்து வனத்துறை அதிகாரி சக்கரவர்த்தி என்பவர் கிராம மக்களிடம் பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது, இந்த பாம்பிற்கு இரண்டு தலை இருப்பது என்பது மனிதனுக்கு இரண்டு தலை இரண்டு கட்டைவிரல் இருப்பது போன்ற ஒரு உயிரினம் பரிணாம மாறுபாடு ஆகவே இதனை கடவுள் புராணக் கதைகளோடு ஒப்பிட வேண்டாம் தற்போது நாங்கள் இதை உங்களிடமே விட்டு சென்றால் நீங்கள் இந்த ஒரு பாம்பின் ஆயுட்காலத்தை மட்டுமே அதிகரிக்க முடியும்.

அதை நாங்கள் எடுத்துச் சென்றால் இதேபோல் பல இரட்டை தலை பாம்புகள் இனபெருக்கத்தால் உற்பத்தி செய்யப்பட்டு பல பாம்புகளின் ஆயுட்காலத்தை நீடிக்கலாம். பல பாம்புகளை வாழ செய்யலாம் என்று புரிய வைத்து பாம்பை மீட்டு சென்றனர். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.