நாள் முழுவதும் படுக்கையை பகிர்ந்தாலும் ரூ.500 தேறாது! விலை மாதுக்களின் பரிதாப வாழ்க்கை!

ஃப்ரீ டவுன்: நாள் முழுக்க பாலியல் தொழில் செய்தாலும் வயிற்றுப்பாடு தீரவில்லை என பெண் ஒருவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.


மேற்கு ஆப்ரிக்க நாடான சியாரா லியோன், மிகவும் வறுமையான நாடாக மாறிவருகிறது. அந்நாட்டின் தலைநகர் ஃப்ரீ டவுனில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் பற்றி, ஒரு ஆவணப்படம் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் பேசும் ஒரு பெண், ''நாள்தோறும் உடல் வலிக்க வலிக்க பாலியல் தொழில் செய்தாலும், ரூ.391 மட்டுமே வருமானம் கிடைக்கிறது.

குறைந்தது 2 பேருடன் படுத்தால் மட்டுமே ரூ.40 கிடைக்கும். அதை வைத்து வயிற்றுப்பாட்டை தீர்க்க முடியும். ஆனால், பல வாடிக்கையாளர்கள் மிருகத்தனமாக புணர்ந்துவிட்டு, கையில் வைத்திருக்கும் காசைக்கூட பிடுங்கிச் சென்றுவிடுகிறார்கள். இதனால், பல நாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய அவலமும் ஏற்படுகிறது.

பெண்களை சக ஜீவனாக நினைக்காமல், மிகவும் கீழ்த்தரமாக பலர் நடத்துகிறார்கள். எனது மார்க்கெட் விலை ரூ.391. ஆனால், எல்லா நாளும் இதே பணம் கிடைக்காது. சில நேரங்களில், ரூ.40 மட்டுமே கிடைக்கும். ஒருவேளை, ரூ.391 கிடைத்தாலும், ஆணுறை வாங்கவே ரூ.190 செலவாகிறது. எஞ்சிய பணத்தில்தான், நானும், எனது குடும்பத்தினரும் சாப்பிட வேண்டும். இது மிக வேதனையாக உள்ளது.

எனது அம்மா சமீபத்தில் இபோலா நோய்க்கிருமி பாதித்து இறந்துவிட்டதால், செக்ஸ் தொழிலுக்கு வர நேரிட்டுவிட்டது. எனக்கு, நர்ஸ் வேலைக்குச் செல்ல வேண்டும் என ஆசை உள்ளது. ஆனால், வயிற்றுப்பாடு தீரவே கஷ்டமாக உள்ளது, என,'' அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். 

சியாரா லியோன் நாட்டில், தற்போதைய வறுமை சூழல் காரணமாக, 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு எவ்வித சமூக பாதுகாப்பும் கிடையாது. போலீசாரும் அவ்வப்போது பலவிதங்களில் தொல்லை தருவார்களாகம், அதையும் சகித்துக் கொண்டே இந்த தொழிலை சாப்பாட்டிற்காக செய்ய வேண்டியுள்ளதாக, அந்த ஆவணப்படத்தில் பேசும் பெண்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.