அன்புமணியை ராஜ்யசபா எம்பி ஆக்குவோம்! ஜென்டில்மேன் ஜெயக்குமார் உறுதி!

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் படி பாமகவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி நிச்சயம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சென்னையில் தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார். நோன்பு திறந்து வைத்த பிறகு ஜெய குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு திமுக செய்த பொய் பிரச்சாரம் தான் காரணம் என்றார். திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வென்றும் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை என்று மக்கள் உணர்ந்துள்ளதாக விஜயகுமார் தெரிவித்தார்.

அப்போது குறிப்பிட்ட செய்தியாளர்கள் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பகை பாமகவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப் படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அதிமுக ஒரு ஜென்டில்மேன் கட்சி என்ற பதில் அளித்தார் ஜெயக்குமார். ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் படி அதிமுக நிச்சயம் நடந்து கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

இதன் மூலம் பாமகவிற்கு அதிமுக ராஜ்யசபா எம்பி பதவியை நிச்சயம் கொடுக்கும் என்றும் அதன் மூலமாக அன்புமணி ராஜ்யசபா எம்பி ஆவார் என்பதும் உறுதியாகி உள்ளது.