குஷ்புக்கும் நாய்க்கும் இருக்கும் மதிப்புகூட எங்களுக்கு இல்லையே! கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைகள்!

ராஜீவ்காந்தி பிறந்த தினத்தையொட்டி காமராஜர் அரங்கத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவுக்கு தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகில் வாஸ்னிக் தலைமை வகித்தார்.


மேடை என்றால் அதிகபட்சம் ஏழெட்டு தலைவர்கள் மேலே இருப்பார்கள். ஆனால், இந்த மேடையில் கிட்டத்தட்ட 100 பேர் மேடையில் ஏறி அமர்ந்தார்கள். விழாவுக்கு வந்தவர்கள் எல்லாம் கீழே இருந்து ஒரு சேர் எடுத்துவந்து மேடையில் போட்டு அமர்ந்ததுதான் காமெடி.

அந்த மேடையில் எல்லோரையும் கவர்ந்து இழுத்தது குஷ்புதான். ஆம், குஷ்புவும் அவர் கையில் இருந்த நாயின் மீதும்தான் எல்லோருடைய பார்வையும் இருந்தது.

இந்த நாயை முகில் வாஸ்னிக்கிற்கு யாரோ ஒருவர் பரிசாக கொடுத்தாராம், அவர் அதை குஷ்புக்குக் கொடுத்துவிட, மேடையில் ஜம்மென்று உட்காரும் பாக்கியம் பெற்றது அந்த நாய். குஷ்பு அந்த நாயை தடவிக் கொடுத்ததும், உம்மா கொடுத்ததும் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களை ஏகமாய் உஷ்ணமாக்கியது.

இப்படி காங்கிரஸ்காரனா பிறந்து நிற்கிறதைவிட குஷ்புவோட கையில நாயாய் பொறந்திருக்கலாம் என்று பலரும் புலம்பினார்கள். ஆனால், மேடையில் இருந்த தலைகள்தான் இந்த சம்பவத்தைப் பார்த்து கடுப்பானார்கள். எப்படியோ ராஜிவ்காந்தி விழாவாக தொடங்கி குஷ்புவின் நாய் விழாவாக அது முடிந்துபோனது.