வட தமிழக மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களில் இன்று முதல் மே 1-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலி குடத்துடன் மக்கள் அலையக்கூடாது… அதிகாரிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
வட தமிழக மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களில் இன்று முதல் மே 1-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், இன்று முதல் மே 1-ம் தேதி வரை தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் துறைகளின் செயப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பம், குடிநீர் தேவை அதிகரிப்பு ஆகிய 2 விதமான நெருக்கடிகள் ஏற்படும்.
ரூ.150 கோடி ஒதுக்கீடு: தமிழகத்திலுள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் வருவாய் நிர்வாக ஆணையர் மேற்கொள்ள வேண்டும்.
கூட்டுக் குடிநீர் திட்டங்களை தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்றுநிலையங்களுக்கு தடையின்றிமின்சாரம் கிடைப்பதை மின்வாரிய தலைவர் உறுதி செய்ய வேண்டும்.
பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலமோ குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு விடாமல் தலைமைச் செயலாளர் கண்காணிக்க வேண்டும்’ என்றார்.