சென்னையில் தண்ணீர் எமர்ஜென்ஸி! என்னம்மா செய்யுறே எடப்பாடி?

இப்போது சென்னையில் இரண்டு பேர் சந்தித்துக்கொண்டால் கேட்பது, ‘உங்க வீட்ல தண்ணி இருக்குதா?‘ என்பதுதான்.


அந்த அளவுக்கு தண்ணீர் எமர்ஜென்சி நிலவுகிறது. சென்னை முழுக்க பல ஹோட்டல்களை இரவு மூடி வைக்கிறார்கள். என்னவென்று விசாரித்தால், கை கழுவ குழாயில் தண்ணீர் இல்லை. ஒருசில ஹோட்டல்களில் வாளியில் ண்ணீர் தருவதைப் பார்த்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. கையேந்தி பவன்களில் டிஷ்யூ பேப்பர் விளையாடுகிறது. பகல் இரவு என்று நேரம் காலம் பார்க்காமல் ரோடு முழுவதும் மக்களைவிட குடங்கள்தான் அதிகம் காண முடிகிறது. ஒரு குடும் தண்ணீருக்காக வராத அடிபம்பை வேடிக்கை பார்ப்பதும், வழியில் செல்லும் தண்ணீர் லாரியை நிறுத்தி கேட்பதுமாக மக்கள் இப்போது தண்ணீர் அடிமைகள் போல மாறிவிட்டார்கள்.

யாருடைய வீட்டிலாவது தண்ணீர் நன்றாக வருகிறது என்றால், அவர்களைப் பார்த்து பொறாமைப் படுவது மட்டுமின்றி, வீட்டுக்கு தண்ணீர் குடிக்க வரலாமா என்று டென்ஷன் ஆக்குகிறார்கள். லாரிக்காக காத்திருக்கும் மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தண்ணீருக்காக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.சைக்கிள், டூ வீலர்கள் மட்டுமின்றி இப்போது கார்களிலும் குடங்களை துக்கிக்கொண்டு அலைகிறார்கள். பெரும்பாலான பெண்களும் பெண் குழந்தைகளும்தான் இந்த நெருக்கடியில் சிக்கி இருக்கிறார்கள். இந்த நிலையை சமாளிக்க முடியாமல் பலர் வீட்டைக் காலிசெய்து விட்டார்கள். 

இந்த தண்ணீர் எமர்ஜென்சி பற்றிய கவலை இல்லாமல், எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையில் இருக்கிறார்கள். இந்த நாடும் மக்களும் நாசமாகப் போனாலும் கவலைப்படாத அரசியல்வாதிகளைப் பெற்ற நாம்தான் பாக்கியவான்கள்.