ஏற்கனவே 2 குழந்தை! வயிற்றில் 3வது குழந்தை என மகிழ்ந்த செய்தி வாசிப்பாளர்! ஆனால் டாக்டர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

வாஷிங்டன்: டிவி தொகுப்பாளினி ஒருவருக்கு விபரீத புற்றுநோய் நிகழ்ந்துள்ளது.


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியை சேர்ந்தவர் மிச்செல் வெலிஸ். 38 வயதாகும் இவர், டிவி தொகுப்பாளினியாக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், புதிதாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் கரு தரிக்க முயற்சித்து வந்துள்ளார். இதன்படி அவருக்கு கருப்பையில் ஒருவித மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனை ஆரம்பத்தில் குழந்தை உண்டாகியதாக நினைத்து, மகிழ்ச்சியில் திளைத்த மிச்செலுக்கு, பிரசவத்தின்போதுதான் உண்மை புரிந்திருக்கிறது.

ஆம், குழந்தை பிறப்பதற்காக மருத்துவமனை சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கருப்பையில் இருப்பது புற்றுநோய்க்கட்டி என கண்டுபிடித்தனர். உடனடியாக அவரது வயிற்றில் இருந்து புற்றுநோய்க்கட்டியை அவர்கள் அகற்றினர். அந்த கட்டி, திராட்சைக் கொத்து போல இருந்தது. 

இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின்படி, உடனடியாக இதற்காக கீமோதெரபி செய்துகொண்டார். ஆனால், அவருக்கு ஏற்பட்டது Choriocarcinoma எனும் ஆபத்தான புற்றுநோய் பாதிப்பாகும். இது கீமோதெரபி செய்துகொண்டாலும், மறுபடியும் உடல் முழுக்க வேகமாகப் பரவக் கூடியதாகும். இந்த அரிய வகை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்திருந்தாலும், தற்போது மிச்செலின், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் பகுதிக்கு, புற்றுநோய் பரவியுள்ளதாக, தெரியவந்துள்ளது. இதையடுத்து, மீண்டும் கீமோதெரபி செய்துகொள்வதற்காக, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.