பாசிப்பயறு பறிக்கச் சென்ற விதவைப் பெண்! தோட்டத்தில் ஆடைகள் களைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மர்மம்! விருதுநகர் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் சொந்த வயலுக்கு பாசிப்பயிறு பறிக்க சென்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சி சேதுபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் இவரது மனைவி சத்யபாமா இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான அதே பகுதியில் வயல் உள்ளது. இதையடுத்து கணவன் மனைவி இருவரும் வயலில் தோட்ட வேலைகளை செய்து வந்துள்ளனர். வீட்டின் அருகிலேயே வயல் உள்ளதால் சத்தியபாமா மாலை வேளையில் வயலுக்கு பாசிப்பயிறு பரிக்க சென்றுள்ளார்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் சத்தியமா வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் கணவர் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து தனது மனைவியை காணவில்லை அருகிலிருந்த வீட்டார்களிடமும் கனகராஜ் தெரிவித்துள்ளார்.பின்னர் ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு சத்தியபாமாவை தேட ஆரம்பித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர் கிடைக்காததால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஊர் பொது மக்களுடன் சேர்ந்து சத்யபாமாவை தேடத் தொடங்கினர். இந்நிலையில் நீண்ட நேர தேடலுக்குப்பிறகு காலை சத்யபாமா சோளக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்துள்ளனர். இதையடுத்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அங்கு வந்த மருத்துவ குழுவினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சத்தியபாமா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா ?மற்றும் வேறு ஏதேனும் முன் பகை உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் அவரது கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.